Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing

Monday, 2 July 2018

யார் இந்த* *சண்டிகேஸ்வரர்

*யார் இந்த* *சண்டிகேஸ்வரர்*

சண்டிகேஸ்வரர் முன்பு கை தட்டலாமா?
சிவன் கோவில்களில் சண்டிகேஸ்வரர் சன்னதியை நீங்கள் பார்த்திருப்பீர்கள். சிலர், அந்த சன்னதியை அடைந்ததும் பவ்வியமாக கை தட்டுவார்கள். இன்னும் சிலர் பலமாக கை தட்டுவார்கள். மேலும் சிலர் அமைதியாக கன்னத்தில் போட்டுக் கொள்வார்கள்.
உண்மையிலேயே இப்படிச் செய்யலாமா? அதற்கு முன், யார் இந்த சண்டிகேஸ்வரர் என்று பார்த்து விடுவோம்…
சோழநாட்டில் சேய்ஞ்ஞலூர் என்ற திருத்தலம் உள்ளது. இங்கு எச்சதத்தன்-பவித்திரை தம்பதியினர் வசித்தனர். இவர்களது மகன் விசாரசருமன். இவன் சிறு வயதிலேயே சிவபக்தி கொண்டவனாக வளர்ந்தான்.
பசுக்களை மேய்க்கும் தொழிலை மேற்கொண்டதால் பசுக்கள் இவனை தாங்கள் உயிராக கருதின. மாடு மேய்க்க செல்லும் இடத்தில் மணலில் சிவலிங்கம் வடிப்பது இவனது வழக்கம். மேய செல்லும் பசுக்கள் அதன்மேல் பாலை சுரந்து அபிஷேகம் செய்யும். இவ்வாறு சிவ சேவை செய்த பசுக்கள் வீட்டுக்கு வந்த பிறகும் தங்கள் எஜமானர்களுக்கும் தேவையான பாலை சுரந்து கொடுத்து வந்தன.
ஒருமுறை அந்த ஊர் இளைஞன் ஒருவன் சிவலிங்கம் மீது பசுக்கள் பால் சுரந்ததை பார்த்து விட்டான். அத்துடன், விசாரசருமன் அதை கண்டு கொள்ளாமல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி ஆனான். ஊருக்குள் சென்று நடந்த விவரத்தை தெரிவித்தான். மாடுகளின் உரிமையாளர்கள் இதுகுறித்து எச்சதத்தனிடம் சொல்லி, மகனை கண்டிக்கும்படி கூறினர்.
அவர் உண்மையை அறிய ஒருநாள் மாடு மேய்க்கும் இடத்துக்கு வந்து மறைந்து நின்று கவனித்தார். மாடுகளின் உரிமையாளர்கள் கூறியபடியே மண் லிங்கத்தின் மீது பசுக்கள் பாலை சொரிந்தன. விசாரசருமன், அந்த மணல் லிங்கத்தின் முன் ஆழ்ந்த தியானத்தில் இருந்தான்.
அதைப் பார்த்த எச்சதத்தனுக்கு கோபம் வந்து விட்டது. மகனை உதைத்து கண்டித்தார். மேலும், மணல் லிங்கத்தை காலால் மிதித்து உடைத்தும் விட்டார். இதனால் கோபம் அடைந்த அவரது மகன் விசாரசருமன், அவரது கால் மீது தன் கையில் இருந்த குச்சியை எறிந்தான். அது சிவன் அருளால் கோடரியாக மாறி அவரது காலை காயப்படுத்தியது.
அளவு கடந்த பக்தி காரணமாக தந்தையையே தாக்க துணிந்த அந்த அதி தீவிர பக்தன் முன்பு பார்வதி தேவியுடன் தோன்றினார் சிவன்.
எச்சதத்தனின் காயத்தை மறையும்படி செய்தவர், விசாரசருமனுக்கு சிவ கணங்களை நிர்வாகம் செய்ய சண்டிகேச பதவியை வழங்கினார். அதோடு, தனக்கு சூட்டப்படும் மாலை, நைவேத்யம் ஆகியவை அவருக்கே தினமும் வழங்கப்படும் எனவும் அருள்பாலித்தார்.
இதன்படி சிவனுக்கு அணிவித்த மாலையையே சண்டிகேஸ்வரருக்கும் அணிவிக்கும் பழக்கம் இருக்கிறது. சிவன் கோவிலுக்கு வருபவர்கள் சண்டிகேஸ்வரை வணங்காமல் சென்றால் அவர்கள் ஆலயத்துக்கு வந்த பலன் கிடைக்காது என்பது நம்பிக்கை.
சண்டிகேஸ்வரர் சிவ தியான நிலையில் இருப்பவர். இவர் முன் பலர் கை தட்டி வணங்கி சுற்றி வருகின்றனர். இவ்வாறு செய்தால் இவரது தியானம் கலைந்து விடும் என்பது ஐதீகம்
சிவ ஆலங்களில் சண்டீகேஸ்வரர் முன் கை தட்டுவது ஒரு பெரிய பாவ செயல்
மேலும் சண்டீகேஸ்வரர் சிவபக்தர் மட்டும் இல்லை சிவனின் சொத்துகளை பாதுகப்பவர்
எனவே சிவஆலயங்களை விட்டு செல்லும் முன் சண்டிகேஸ்வரர் முன் சென்று
மெதுவாக சத்தம் வராமல் கைகளை துடைத்து ,சிவன் கோயில் சொத்து எதையும் நாம் எடுத்து செல்லவில்லை என்பதை சண்டீகேஸ்வரர் தியானம்
கலையாமல் செய்யவேண்டும்
இதுவே மறையாகும் தங்கள் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் இதனை தெரிவிப்பது நமது கடமையும் அல்லவா!!
அதனால் அவர் முன்பு கை தட்டி வணங்காமல் அமைதியாக வணங்குவதே சரியானது. சண்டிகேஸ்வரரை வணங்கினால் மன உறுதியும், ஆன்மிக பலமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை...

“ 🌺 *ஓம் நமசிவாய* 🌺 “

Tuesday, 12 June 2018

நற்றுணையாவது நமச்சிவாயவே

"சிவபெருமானிடம் இருந்து வாங்கக்கூடாத ஒன்று."

நமக்கு என்ன தேவை என்று நம்மை விட நன்றாக அறிந்தவர் சிவபெருமான். ஆயினும், நாம் உருகி கேட்டால், இல்லை என்று சொல்லாமல் வாரி வழங்குபவரும் சிவபெருமான் தான்.

இதை தான் மாணிக்கவாசகர் திருவாசகத்தில் "வேண்டத்தக்க தறிவோய் நீ வேண்ட முழுதும் தருவோய் நீ" என்று போற்றுகிறார்.

பேதம் போற்றாத பெருங்கருணை கொண்ட சிவபெருமான் தான் முழு முதற் கடவுள் என்று உணர்ந்து வழிபடுவோர் ஈசனிடமிருந்து வாங்க கூடாத ஒன்று "பின்வாங்குதல்".

ஈசனிடமிருந்து எதை வேண்டுமானாலும் கேட்டு வாங்கலாம். ஆனால் ஒருபோதும், எவர் வற்புறுத்தலுக்கும் பயந்து பின்வாங்க கூடாது.

நான் படும் துயரங்கள் மலை அளவு இருப்பினும், இந்த இடர்களை களைந்து எம்மை ஆனந்தமாக வாழ வைக்க, எம்மை படைத்து காக்கும் சிவபெருமான் இருக்கிறார் என்று தன் மனதுக்கு சொல்லிக் கொடுங்கள். ஈசன் அருளால் உங்கள் மனம் பக்குவப்படும்.

பக்குவப்பட்ட மனம் ஒருபோதும் சிவ வழிபாட்டில் இருந்து பின்வாங்குவதில்லை.

ஈசனை விட்டு பின்வாங்காதே. பின்வாங்கி நொந்து சாகாதே. நற்றுணையாவது நமச்சிவாயவே.

Tuesday, 1 May 2018

முருகனது ஆசியைப் பெற முதன்மை தகுதி

பிரணவத்தின் சூத்ரதாரியான முருகனே அனைத்திற்கும் ஆதாரமாகி இயக்கமும், ஒடுக்கமுமாகி எல்லா ஜீவர்களிடத்தும் கலந்து நின்று இயற்கையோடு இயற்கையாய் கலந்துவிட்ட படியினாலே தேவரிஷி கணங்களும், சர்வ சக்திகளும் மட்டுமல்ல, இயற்கை கடவுளால் படைக்கப்பட்ட அத்துணை உயிருள்ள ஜீவராசிகளும் ஆசிகளை வழங்கிடும் அவ்வளவு உயர்ந்த ஆற்றலுடைய முருகனின் நாமங்கள். ஏன் ஜடப்பொருள்கள் கூட கட்டுப்படும்.

அற்புதமான சக்திகளை அருளவல்லதும், ஞானத்தை ஊட்ட வல்லதுமானதும், அனைத்தும் தரவல்லதும், ஏன் முருகனைப் போலவே ஆக்கி கொள்ளக் கூடிய வல்லமைகளையும் அந்த முருகனது நாமங்களே நமக்கு அருளுமென்றால் எப்பேர்ப்பட்ட ஆற்றலுடைந்து முருகனின் நாமங்கள்.

எல்லாம் வல்ல முருகனது நாமங்களை சொல்லி ஆசி பெற விரும்பினால், ஜீவதயவே வடிவான முருகனுக்கு பாத்திரமான உலக உயிர்களுக்கு துன்பம் செய்யாது, உயிர்க்கொலைதவிர்த்து, புலால்மறுத்து, சுத்தசைவ உணவை மேற்கொள்ள வேண்டும்.

முருகனது ஜீவதயவு தோன்றுமிடங்களான உலக உயிர்கள் துன்பம் கண்டு இரங்கி இதம் புரிவதோடு மாதம் ஒருவருக்கேனும் பசித்த ஏழைகளுக்குப் பசியாற்றுவிக்க வேண்டும் என்பதுவே முருகனது ஆசியைப் பெற முதன்மை தகுதிகளாகும்.

முத்தர்கள் போற்றும்
முருகப்பிரான் திருவடியை
நித்தமும் போற்றிட
‌நினைத்தவை சித்தியே.

#ஸ்ரீராமஜயம்

Sunday, 25 March 2018

ரகு குலத்தில் உதித்த ராமன் , மனிதன் அல்ல

ராவணனை அழித்த பிறகு,போர்க்களத்தில் ராமபிரான் ஓய்வாக தரையை நோக்கியபடி அமர்ந்திருந்தார்....!!

அப்போது ஒரு பெண்ணின் நிழல் தெரிந்தது.....!!
அந்த நிழலுக்குச் சொந்தக்காரியான பெண்,

அவரது திருப்பாதங்களைத் தொட முயற்சிப்பதை,

ராமபிரான்.... நிழலின் அசைவின் மூலம் புரிந்து கொண்டார்...!!

உடனே தனது காலை உள்ளிழுத்துக் கொண்டார்....!!

“நீ யாரம்மா?” என்றார்....!!

“நான் ராவணனின் மனைவி மண்டோதரி....!!

என் கணவரை யாராலும் வெல்ல முடியாது என இருமாந்திருந்தேன்....!!

ஆனால்,
அவரையே ஒருவன் கொன்று விட்டான் என்றால்,

அவனிடம் ஏதோ உயர்ந்த குணம் இருக்க வேண்டும் என நினைத்தேன்.....!!

மேலும்.
சத்திரிய குல தர்மப்படி,

கணவனை இழந்த பெண்ணை வெற்றி பெற்றவன் ,
என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.....!!

ஆனால் நீ என்னிடம் வரவில்லை....!!

ஆச்சரியப்பட்டேன்.....!!

இங்கே நீ ,
என் நிழல் உன் மீது படுவதைக் கூட விரும்பவில்லை என்னும் போது,

உன் சிறந்த குணத்தை என்னவென்பேன்......!

என் கணவரிடம் கூட ,

ரகு குலத்தில் உதித்த ராமன் ,
மனிதன் அல்ல.....!!
உலகைக் காக்கும் பரம்பொருள்...!!
விஸ்வரூபன்.....!!
அவனது திருநாமம் எல்லாப் பாவங்களையும் நொடிப் பொழுதில் போக்கவல்லது.....!!

அவன் வேதத்தின் சாரம்.....!!

ராமன் சாட்சாத் தெய்வ வடிவம்....!!

அவனிடம் பகையை ஒழித்து சீதையை விட்டுவிடுங்கள்’ என்று மன்றாடினேன்.....!!

அவர் கேட்கவில்லை.....!!

உன் வெற்றிக்கு காரணம்,

என் கணவரிடம் இல்லாத ஒரு நற்குணம் உங்களிடத்தில் இருந்தது தான்....!!

அதுதான் தங்களின் ஏகபத்தினி விரதத்தன்மை.....!!

அதனால் தான் நீ வென்றாய்,” என்றாள்.....!!

அனைத்தும் கேட்ட ராம பிரான் சிறு புன்னகை புரிந்தார்.....!!

தன் சுயவடிவான ' நாராயணனாக' அவளுக்கு 'விஸ்வரூப தரிசனம்' கொடுத்தார்.....!!

ராமாயணத்தில் பாக்கியவதியாகத் திகழ்ந்தவள் மண்டோதரி.....!!

அனுமன் இலங்கை சென்று ராவணனின் அந்தப்புரம் சென்ற போது,

மண்டோதரி ஒழுக்கமான உடை அலங்காரத்தை கண்டு,

' இவள் சீதையாக இருப்பாளோ’ என்று சந்தேகம் கொண்டான் அனுமன்....!!

அந்தளவுக்கு ஒழுக்கமுள்ளவளாக விளங்கியதால் தான்,

கெட்டவனுக்கு வாழ்க்கைப்பட்டும் மண்டோதரிக்கு ' நாராயணின் விஸ்வரூப தரிசனம்' பெற்றாள்....!!

உயர்ந்த சாதியில் பிறந்தவன்,

வசதியில் உயர்ந்தவன்,

அரச பதவியில் இருப்பவன் ,

என இறைவன் பார்ப்பதில்லை...!!

நம்முடைய பயபக்தி,
அன்பு,
ஒழுக்கம்,
இறைச்சேவை ,
அப்பழுக்கற்ற தூய உள்ளம்
என இவையே இறைவனின் அருள் தரிசனம் பெறும் வழிமுறையாகும்.....!!

ஆகவே தான் அசுரகுலத்தில் பிறந்தாலும்,

தன் ஒழுக்க குணத்தால்,

'இராவணனின் மனைவி' மண்டோதரிக்கு ஸ்ரீராமபிரானின்
விஸ்வரூபம் காணும் பாக்கியம் கிடைத்தது.......!!

இன்றைக்கு இராமனின் பிறந்தநாள்.

ஸ்ரீ ராம ஜெயம்..!! ஸ்ரீ ராம ஜெயம்....!!!
ஸ்ரீ ராம ஜெயம்......!!!!ஸ்ரீ ராம ஜெயம் !!!
#Shared

Tuesday, 27 February 2018

Please note this as it's very important for al


*Dear All:  Please note this as it's very important for all.  Shared by a doctor: For those who get up at night from sleep to urinate or early in the morning.*

*Each individual must take note of the three 1/2 minutes.*

*Why is it important? Three 1/2 minutes will greatly reduce the number of sudden deaths.*

*Often this occurs: a person who still looks healthy has died in the night.*

*Often we hear stories of people who say, "Yesterday, I was chatting with him. Why did he suddenly die?*

*The reason is that when you wake up at night to go to the bathroom, it is often done in a rush.*

*Immediately we stand, and the brain lacks blood flow.*

*Why are "Three 1/2 minutes" very important?*
*In the middle of the night, when you are awakened by the urge to urinate for example, the ECG pattern can change.*

*Because in getting up suddenly, the brain will be anaemic and causes heart failure due to lack of blood.*

*You are advised to practice the "Three 1/2 minutes," which are:*

*1. When waking from sleep, lie in bed for the 1st 1/2 minute;*

*2. Sit in bed for the next 1/2 minute;*

*3. Lower your legs, sitting on the edge of the bed for the last half-minute.*

*After three 1/2 minutes, you will not have anaemic brain and heart will not fail, reducing the possibility of a fall and sudden death.*

*Share with family, friends & loved ones.*

*It can occur regardless of age; young or old.*

*Sharing is Caring. If you already know, regard this as a refresher."*

Please try to forward this important Health tip to all your groups, and you/your family also should follow it.

Monday, 26 February 2018

இத்தாயின் #கால்தூசிக்கு வரமுடியுமா அறியாமையை பயண்படுத்தி மதமாற்றம் செய்யும் சக்திகள்

இத்தாயின் #கால்தூசிக்கு வரமுடியுமா
அறியாமையை பயண்படுத்தி மதமாற்றம் செய்யும் சக்திகள்

மதுரை குஞ்சரத்தம்மாள்.......

தாது வருடப் பஞ்சம் என்ற பெயரை நாம் கேள்விப்பட்டிருப்போம் - 1875 தொடங்கி 1880 வரை தமிழகத்தைப் புரட்டிப் போட்ட பஞ்சம் அது.
கண் முன்னே கணவனும், மனைவியும் ஒட்டிய வயிருடன், யார் முதலில் சாகப்போகிறோம் என்று தெரியாமல் ஒருவரை ஒருவர் வெற்றுப் பார்வை பார்த்தபடி படுத்துக் கிடந்த வேதனை மிகுந்த காலம் அது.

பஞ்சம் தந்த பாடங்கள் ஒரு பக்கம் இன்றும் பேசப்பட்டு வருகிறது.

அதில் நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய கதை குஞ்சரம்மாவினுடையது.

குஞ்சரம் தாசி குலத்துப் பெண்மணி -
மதுரையில் கொடிகட்டிப் பறந்த தாசி.

பெரும் செல்வச் செழிப்பு. மதுரை நகரைச் சுற்றி இருந்த செல்வந்தர்கள் எல்லாம் குஞ்சரத்தின் அழகில் மயங்கிக் கிடந்த காலம் அது.

வடக்கு ஆவணி மூல வீதியில் உள்ள சந்தில் இருந்த இரண்டு பெரும் வீடுகளும் அவளுடையவைதான்.

தாது வருடம் துவங்கிய இரண்டாவது வாரத்தில் அந்த முடிவினை எடுத்தாள்.

கொடும் பஞ்சத்தில் மக்கள் கஞ்சிக்கு வழியின்றி, கணக்கின்றிச் சாவதைப் பார்த்து, வேதனையால் துடித்துத் தினமும் கஞ்சி காய்ச்சி ஊற்றத் துவங்கினாள்.

பெரும் வட்டையில் காய்ச்சிய கஞ்சியை விசாலமான தனது வீட்டுத் திண்ணையில் வைத்து அவள் ஊற்றும் செய்தி ஊரெங்கும் காட்டுத் தீ போல் பரவியது.

வடக்கு ஆவணி வீதியை நோக்கி மக்கள் சாரை சாரையாக வர ஆரம்பித்தனர்.

இவளுக்கு எதற்கு இந்த வேலை? சொத்தையெல்லாம் விட்டுட்டு தெருவுக்கு வரப்போறா என்று பெருந்தனக்காரர்கள் பேசிக் கொண்டனர்.

அவளின் செய்கை அவர்களை கூசச் செய்தது -
ஆனால், கஞ்சி ஊத்தும் செய்தி கேட்டு மக்கள் வந்து கொண்டேயிருந்தனர்.

அந்தக் கூட்டத்தை கண்கொண்டு பார்க்க முடியவில்லை.

பரட்டைத் தலையும் எலும்பும் தோலுமாக துணியென்று சொல்ல முடியாத ஒன்று இடுப்பிலே சுற்றியிருக்க குழந்தைகளைத் தூக்கியபடி வரிசை, வரிசையாக வந்து கொண்டிருந்தனர் -

ஒரு வட்டையில் துவங்கியது, மூன்று வட்டையானது, அதற்கு மேல் அதிகப்படுத்த முடியவில்லை. தினமும் ஒரு வேளைக் கஞ்சி ஊற்றப்பட்டது. அந்தக் கஞ்சியை வாங்க, காலையிலிருந்தே கால்கடுக்க நின்றனர்.

தேவையின் பயங்கரம் நினைத்துக் கூட பார்க்க முடியாதபடி இருந்தது. ஆனாலும், அவள் அடுப்பிலே விறகுகளைத் தள்ளி தன்னம்பிக்கையோடு எரித்துக் கொண்டிருந்தாள்.

தாது வருடத்தின் ஆறாவது வாரத்தில் தான் கலெக்டர் கஞ்சித்தொட்டியைத் திறக்க முன் வந்தார். ஒரு வகையில் அதற்கு குஞ்சரத்தின் செயல்தான் காரணம்.

நகரில் மூன்று இடங்களில் அரசு கஞ்சித் தொட்டியைத் திறந்தது.

நகரின் மொத்தப் பசிக்குக் குஞ்சரத்தின் அடுப்பே கதி என இருந்த நிலைமை கொஞ்சம் மாறியது -

ஆனாலும், தாது வருடம் முழுவதும் குஞ்சரத்தின் அடுப்பு எரிந்தது -

பதிமூன்று மாத காலம் எரிந்த அடுப்பு -
எல்லாவற்றையும் எரித்தது -
அவள் தனது வாழ்க்கை முழுவதும் சேமித்த சொத்துக்களை உலையிலே போட்டாள் -
கல் பதித்த தங்க நகைகள் - வெள்ளி நகைகள் - முத்துக்கள் - காசு மாலை - மோதிரம் - ஒட்டியாணம், தோடு-ஜிமிக்கி எல்லாம் கஞ்சியாய் மாறி தட்டேந்தி நின்ற நீண்ட வரிசைக்கு பசிப்பிணி தீர்த்தது.

தொடர்ந்து எரிந்த அடுப்பின் புகையடித்து கரி படிந்திருந்த இரண்டு பெரிய வீடுகளும் விற்கப்பட்டு கஞ்சியாய் மாறியது.

தாது கழிந்த இரண்டாவது மாதத்தில் அவள் அடுப்பு அணைந்தது -

அவள் ஓட்டு வீட்டிற்குள் படுத்த படுக்கையானான்

யாரைப் பற்றிப் பேச? யாரிடமும் எதுவும் இல்லாத கொடும் பஞ்சத்தில் கூட குஞ்சத்தைப் பற்றி ஊரெல்லாம் பேசினார்கள்.

அவள் முகம் மலர்ந்திருந்தது.தாய்மையின் பூரிப்போடு அவள் படுத்துக்கிடந்தாள்.

ஒரு நாள் மலர்ந்த முகத்தோடு விடைபெற்றாள் அந்தத் தெய்வத்தாய். தங்கள் வீட்டில் நடந்த சாவாகத்தான் நகரவாசிகள் பலரும் பார்த்தார்கள் அவர் இறப்பை.

சின்ன ஓட்டு வீட்டிலிருந்து குஞ்சரத்தாயை வெளியில் தூக்கிய பொழுது வடக்கு ஆவணி வீதி
கொள்ள முடியாத அளவு கூட்டம் நின்றது.

கோவில் திருவிழாக்களைத் தவிர மதுரையில் மனிதர்கள் கூடிய மிகப்பெரிய கூட்டம் இது தான் என்று கலெக்டர் தனது குறிப்பிலே எழுதி வைத்தார்.

நாடி நரம்புகளில் ஓடுவதெல்லாம் அவளின் ரத்தமென நினைத்து நினைவுகளின் வழியே கட்டிப்புரண்டு கதறியழுதனர். அவள், நாதியற்றவர்களின் பெரும் தெய்வமானாள்.
எண்ணிலடங்கா மனிதக் கூட்டம் அந்தத் தெய்வத்தை நாள்தோறும் வணங்கிச் செல்ல வடக்கு ஆவணி மூல வீதியில் உள்ள உள் சந்துக்கு அலையலையாய் வந்து கொண்டிருந்தது.

அவளுக்கு எதைப் படையலிட்டு வணங்குவது எனத் தெரியாமல் தவித்த பொழுது.

சலங்கையைப் படையிலிட்டு வணங்கி தெய்வமாக்கிக் கொண்டனர் - மாமதுரை மக்கள் .

Thursday, 22 February 2018

உங்களுக்கு தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமலிருக்கலாம்

உங்களுக்கு தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமலிருக்கலாம்.....
1. இரவு ஒன்பது மணி முதல் அதிகாலைமூன்று மணிவரை, நதிகளில் குளிக்கக்கூடாது.
2. மாலை6 முதல் காலை 6 வரை இரவுபொழுதாகும்.இந்தநேரத்தில் குளிக்கக்கூடாது.
கிரகண காலத்தில் இந்த கணக்கு இல்லை.
3. அமாவாசை அன்று நமது வீட்டில் தான் சாப்பிடவேண்டும்.
முடிந்தால் அன்று நாம் சாப்பாடு அடுத்தவருக்கு போடவேண்டும்.
4. காயத்ரி மந்திரத்தை
பிரயாணத்தின்போது, சொல்லுதல்கூடாது
சுத்தமானஇடத்தில்தான் ஜபிக்கவேண்டும்.
5. கற்பூர ஹாரத்தி - சூடம்காண்பித்தல் பற்றி ..
சூடம் காண்பிக்கும்போது, கடவுளின் காலிற்கு நான்கு தடவை சுத்தி காண்பிக்கவேண்டும்.
தொப்பிளுக்கு இரண்டு தடவை காண்பிக்கவேண்டும்
முகத்துக்கு ஒரு தடவை
கடைசியாக, முழு உருவத்துக்கும் மூன்று தடவை காண்பிக்க வேண்டும்.
6. தனது வீட்டில் கோலம் போடாமலும் விளக்கேற்றாமலும் ஆலயங்களுக்கு செல்லக்கூடாது.
7. எரியும் விளக்கில் எண்ணெய் அல்லது நெய்யை கையால் தொடுவதும் அதன் பிறகு அதைத் தன் தலையில் தடவிக் கொள்வதும் கூடாது.
8. சிவனுக்கு உகந்தது = வில்வம் ஆகும்
விஷ்ணுவிற்கு உகந்தது = துளசி ஆகும்
விநாயகருக்கு = அருகம்புல் ஆகும்
பிரும்மாவிற்கு உகந்தது = அத்தி இல்லை ஆகும்
இவைகளை மாற்றி மற்றவருக்கு வைத்து வணங்க கூடாது.
9. கலசத்தின் அா்த்தங்கள்
கலசம்(சொம்பு) − சரீரம்
கலசத்தின் மேல் சுற்றியிருக்கும் நூல் − நாடி & நரம்பு
கலசத்தின் உள் இருக்கும் தீா்த்தம் (நீர்) − இரத்தம்
கலசத்தின் மேல் உள்ள தேங்காய் − தலை
கலசத்தின் மேல் உள்ள தேங்காயை சுற்றியிருக்கும் மாவிலை − சுவாசம்
கலசத்தின் அடியில் இருக்கும் அரிசி & இலை − மூலாதாரம்
கூர்ச்சம் − ப்ராணம்(மூச்சு)
உபசாரம் − பஞ்சபூதங்கள்.
10.தமிழ் மாதம் பன்னிரண்டிலும் செய்ய வேண்டிய தானம்...
சித்திரை – நீர்மோர், விசிறி, செருப்பு, குடை,
தயிர் சாதம், பலகாரம்
வைகாசி – பானகம், ஈயப்பாத்திரம், வெல்லம்
ஆனி – தேன்
ஆடி – வெண்ணெய்
ஆவணி – தயிர்
புரட்டாசி – சர்க்கரை
ஐப்பசி – உணவு, ஆடை
கார்த்திகை – பால், விளக்கு
மார்கழி – பொங்கல்
தை – தயிர்
மாசி – நெய்
பங்குனி – தேங்காய்.
11. திருநீற்றை வில்வ பழ ஓடில் வைத்து பூசி கொள்ள சிவ கதி எளிமையாக
கிடைக்கும்.
12. அடியார்கள் மற்றும் சிவ தீட்சை பெற்றவர்கள் தவிர மற்றவர் தண்ணீரில் திருநீற்றை குழைத்து புசிகொள்ள கூடாது.
13. பெண்கள் வேல் மற்றும் சிவலிங்கத்தை அபிஷேகம் செய்யகூடாது (ஆகம முறைக்கு உட்பட்டது )
14. கோவில்களில் சூடம் மற்றும் தீபத்தை கைகளில் ஏற்றி காண்பிக்க கூடாது.
15. நிவேதனம் செய்த தேங்காயை சமையலில் சேர்த்து அந்த உணவை மறுபடியும் சாமிக்கு நிவேதனம் செய்யக்கூடாது

Irumpili Kali Devotees

LinkWithin

Connect with FB

Disclaimer:

The information provided in this website might be wrong or old information. Please add a comment above to get the information corrected

Labels

#RamaNavami #LordRama #Ramar (1) #இராமநாமமகிமை #ராமநாமமகிமை (1) #உங்களுக்குதெரிந்திருக்கலாம் (1) 27 நட்சித்திரகும் அவர் அவர் நட்சித்திர காயத்திரி (1) Bhakti Yoga (2) Blogger (11) IFTTT (12) jnana yoga (2) lord ganesha (3) lord iyyappan (1) lord murugan (4) Mantras (3) Meditation (1) Nar Seva Narayana Seva (1) Navaratri (1) Sri Chakra Nava Avarana Puja (1) WordPress (1) அகஸ்தியர் (1) அகிலாண்டேஸ்வரி (3) அனுமன் (3) ஆஞ்சநேயர் (1) ஆடி அமாவாசை (1) ஆதித்யன் (1) ஆவணி அவிட்டம் (2) ஏழு கன்னிமார்கள் (1) ஐயப்பன் (3) ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களும் அபிஷேகம் செய்ய வேண்டிய பொருள்கள் (1) கடை வீடுகளில் திருஷ்டி (2) கந்த சஷ்டி கவசம் (1) கால பைரவர் (3) காளி (13) கோலமிடுவதால் ஏற்படும் நன்மைகள் (2) சகஸ்ர நாம அர்ச்சனை (1) சக்கரத்தாழ்வார் (1) சங்கடஹர சதுர்த்தி (1) சமஸ்கிருத மொழி (1) சம்ஸ்கிருதம் (2) சரஸ்வதி (3) சரஸ்வதி அஷ்டோத்திர சத நாம ஸ்தோத்திரம் (2) சர்வம் கிருஷ்ணார்ப்பணம் அஸ்து (1) சனி திசை (1) சனி புத்தி (1) சிதம்பரம் நடராஜர் (1) சூரிய பகவான் (2) தண்டாயுதபாணி (2) தானம் - பலன்கள் (1) திருப்பதி ஏழுமலையான் (1) திருமண மந்திரங்கள் (2) தீப ஆராதனைகளின் விளக்கங்கள் (2) தீபாவளியின் வரலாறு & தீபாவளி தானம் (3) துர்க்கா தேவி (11) துளசி (1) துளசியின் சிறப்பும் (1) தை மாதம் (1) நவக்கிரக மந்திரங்கள் (3) நாக தோசம் பரிகாரம் -ராகு -கேது (1) நாகசதுர்த்தி விரதம் (1) பசுவின் கோமியத்தில் (1) பஞ்ச தெய்வங்கள் (2) பிரகதீஸ்வரர் (1) பிரகஸ்பதி (1) பிரதோஷ கால முறை (2) பெருமையும் (1) முத்துக்குமரன் (3) வல்லப மஹா கணபதி (2) வள்ளி மணாளன் (3) விறல் மாரனைந்து திருப்புகழை (1) வீட்டில் பூஜைகளில் உபயோகிக்கக் கூடாத சுவாமி படங்கள் (2) வேலை கிடைக்க மந்திரம் (2) ஸ்ரீ சரபேஸ்வரர் (2) ஸ்ரீ லட்சுமி சங்கு ஸ்லோகம் (1) ஹயக்ரீவர் (1)