Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing

Sunday 12 October 2014

MAY LORD GANESHA BLESS ALL OF US ALL THE TIME !!! விநாயகர் இவ்வளவு தகவல்களா ..?

அன்பு நட்புகளே  வணக்கம்..!
.....நல் வாழ்த்துக்கள்..!


 * "வி' என்றால் சிறப்பு. "நாயகன்' என்றால் தலைவர். சிறப்பு மிக்க தலைவர் என்பது பொருள். கடவுளுக்கெல்லாம் மேலான தலைமைக் கடவுளாக விநாயகப் பெருமான் விளங்குகிறார். 

* மூவரும் தேவரும் போற்றும் தனிப்பெருந்தெய்வம் விநாயகப் பெருமான். ஓங்கார வடிவமுடையவர். போற்றுபவர் துயர் போக்கும் கடவுள். அடியவர்களுக்கு எளிதில் அருள்புரியும் கருணைக்கடல். இடர்களைப் போக்கி வழிகாட்டுபவர் என்பதால் விக்னேஸ்வரன் என்று பெயர் பெற்றார்.

* விநாயகர் ஒரு கொம்பு (தந்தம்), இரு செவிகள், மூன்று திருக்கண்கள், நான்கு திருத்தோள்கள், ஐந்து திருக்கரங்கள், ஆறுஎழுத்து மந்திரம் கொண்டவர். அவரை வழிபட்டால் பிறவிகள் நீங்கும். எண்திசைகளும் புகழும். நவமணிகளும் பெற்று செல்வவளத்துடன் வாழச் செய்வார். 

* விநாயகருக்கு இடைக்கு கீழே பூத உடம்பும், இடையிலிருந்து கழுத்துவரை தேவவுடம்பும், மிருகத்தலையும் உள்ளது. ஒரு கொம்பு ஆண்மையையும், கொம்பில்லாத பகுதி பெண்மையையும் என்று எல்லாவற்றையும் தன்னுள்ளே கொண்டிருக்கிறது. 

* விநாயகர், யானையை அடக்கும் கருவிகளான பாசமும், அங்குசமும் வைத்திருக்கிறார். தன்னை அடக்குவார் ஒருவரும் இல்லை என்பதைக் குறிக்கும் வகையில் தன் கைகளில் இக்கருவிகளை ஏந்தியுள்ளார்.

* விநாயகருக்கு ஐந்து கரங்கள். கும்பம் ஏந்திய திருக்கரம் படைத்தலையும், மோதகம் ஏந்திய கரம் காத்தல் தொழிலையும், அங்குசம் ஏந்திய கரம் அழித்தல் தொழிலையும், பாசம் வைத்திருப்பது மறைத்தலையும், தந்தம் ஏந்திய கரம் அருளல் தன்மையையும் விளக்குகிறது. உலகவுயிர்களுக்கு வேண்டிய ஐம்பெரும் தொழில்களையும் விநாயகப்பெருமானே செய்து இப்பெரிய உலகத்தை இயக்குகிறார். 

* கரும்பு, அவரை, பழங்கள், சர்க்கரை, பருப்பு,நெய், எள், பொரி, அவல், துவரை, இளநீர், தேன்,பயறு, அப்பம், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம், கிழங்கு, அன்னம், கடலை முதலிய பொருட்களை விநாயகருக்கு நிவேதனம் செய்யலாம். இந்நிவேதனப் பொருட்களை அருணகிரிநாதர் திருப்புகழில் குறிப்பிடுகிறார்.

* விநாயகருக்கு உகந்தது அருகு. இது ஓரிடத்தில் முளைத்து, கொடிபோல நீண்டு ஆறு இடங்களில் வேரூன்றிக் கிளைக்கும் தன்மையுடையது. ""அருகு போல் வேரூன்றி'' என்பது பழமொழி. அருகம்புல் இட்டு காய்ச்சிய நீரைக் குடித்தால் காய்ச்சல் தீரும். யோகிகள் யோகப்பயிற்சியில் விளையும் சூடு தணிய அருகுக்கஷாயம் அருந்துவார்கள். இதற்கு "மூதண்டக் கஷாயம்' என்று பெயர்.

* விநாயகரின் சக்திகளாக சித்தி, புத்தி உள்ளனர். அவர் எப்போதும் பிரம்மச்சாரியாக விளங்குபவர். தம்மை வழிபடும் அன்பர்களுக்கு காரிய சித்தியும், அதற்கு புத்தியும் அருள்பவர். அதனால், சித்தி புத்தி என்ற பண்புகளை இரு மனைவிகளாக்கி சித்தி புத்தி விநாயகர் ஆனார். அடியார்களின் இடையூறுகளை அகற்றுவதற்கு வல்லபம் (வல்லமை) வேண்டும். எனவே, இவர் வல்லபை என்னும் சக்தியுடனும் இருப்பார்.

* விநாயகரின் சக்தியாகிய வல்லபை மரீசமுனிவரது புதல்வி.

தோப்புக்கரணம் பிறந்த கதை:

ஜமுகாசுரன் என்னும் அசுரன், தேவர்களுக்கு கொடுமைகள் செய்து வந்தான். தேவர்கள் தன்னைக் கண்டால் தோப்புக்கரணம் இடவேண்டும் என்று நிர்ப்பந்தித்தான். தேவர்களும் பயந்துபோய் இச்செயலைச் செய்து வந்தனர். அவனைச் சம்ஹாரம் செய்ய கிளம்பினார் விநாயகர். விநாயகரையும் தோப்புக்கரணம் இடுமாறு கஜமுகாசுரன் ஆணையிட்டான். கோபமடைந்த விநாயகர் தன் தந்தத்தால் அவனைக் குத்திக் கொன்றார். கஜமுகாசுரன் அழிந்ததும் அவனுக்கு போட்டு வந்த தோப்புக்கரணத்தை நன்றியுணர்வுடன் தேவர்கள் விநாயகப்பெருமானுக்குச் செய்யத் தொடங்கினர். இதுமுதல் தோப்புக்கரணம் போடும் வழக்கம் வந்தது.

விநாயகரை கரைப்பது ஏன்?

கருங்கல், பொன், வெள்ளி, செம்பு, பளிங்கு, மரம், சுதை, வெள்ளெருக்கு வேர் முதலியவைகளால் விநாயகரை வடித்து வழிபாடு செய்யலாம். இவற்றில் சுதை மற்றும் மரத்தாலான வடிவங்களுக்கு அபிஷேகம் செய்ய முடியாது என்பதால், மலர் அலங்காரம் மட்டும் செய்து கொள்ளலாம். மஞ்சள், சந்தனம், களிமண் முதலியவற்றால் செய்த திருமேனிகளை பூஜித்தபின் தூய்மையான நீரில் கரைத்துவிட வேண்டும். மண்ணில் பிறக்கும் நீ இந்த மண்ணுக்கே சொந்தமாவாய் என்பது இதன் தாத்பர்யம்.

ஐந்து சுவாமி பூஜை:

பிள்ளையார், சூரியன், அம்பிகை, விஷ்ணு, சிவன் என்று ஐம்பெரும் தெய்வங்களையும் ஒரே நேரத்தில் ஒரே பீடத்தில் வைத்து பூஜை செய்வதற்கு கணபதி பஞ்சாயதனம் என்பர். இதில் விநாயகப்பெருமானை ஐந்து தெய்வங்களுக்கும் நடுவில் வைத்து வழிபட வேண்டும்.

எங்கும் இவரது அருளாட்சி:

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முதலில் வழிபாடு செய்வது விநாயகரைத் தான். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், பரீட்சை என்று வந்து விட்டால், ""பிள்ளையாரப்பா! எனக்கு அருள் செய்வாய்,'' என்று இவரிடம் போய் நிற்பார்கள். நம் மனதில் மட்டுமல்ல, நாம் செல்லுகின்ற வழியெல்லாம் நமக்குத் துணையாக இருப்பவரும் இவரே. ஆற்றங்கரை, அரசமரம், முச்சந்தி, தெருக்கோடி, முட்டுச்சந்து, ஊர்ப் பொது இடம் என்று எல்லா இடங்களிலும் இவருடைய அருளாட்சிதான் நடக்கிறது.

இழந்த பொருளை தரும் விநாயகர்:

தேவாரம் பாடிய மூவரில் ஒருவரான சுந்தரர், தன் நண்பரான சேரமான் பெருமாள் நாயனாரிடம் பொன்னும் பொருளும் ஏராளமாகப் பெற்றுக் கொண்டு, ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். சுந்தரருடன் திருவிளையாடல் புரிய திருவுளம் கொண்டார் சிவன். சிவகணங்களை வேடர் வடிவில் அவரிடம் அனுப்பி, அவரிடமிருந்த பொன்னையும், பொருளையும் பறித்து மறைத்து வைக்கும்படி ஆணையிட்டார். திருமுருகன்பூண்டி என்ற தலத்துக்கு சுந்தரர் சென்றபோது, பொருள்களை வேடர்களிடம் இழந்தார். இதுபற்றி இறைவனிடம் முறையிட்டார். அங்கிருந்த விநாயகர் சுந்தரரை பெயர் சொல்லி கூப்பிட்டு, பொருளை மறைத்து வைத்திருந்த இடத்தைக் காட்டி அருளினார். அதனால் இவ்விநாயகருக்கு "கூப்பிடு விநாயகர்' என்ற சிறப்புப் பெயர் உண்டானது. கையில் இருக்கும் பொருள்களை தவறுதலாகவோ அல்லது தீயவர்களாலோ இழந்தவர்கள் கூப்பிடு விநாயகரை வழிபட்டால் அவர் அருளால் தொலைந்த பொருள் மீண்டும் வந்து சேரும். கோவை மாவட்டத்தில் திருமுருகன்பூண்டி உள்ளது.


வி – இதற்கு மேல் இல்லை. நாயகர் -- தலைவர்.


விநாயகர் என்றால் தனக்கு மேலே ஒரு தலைவர் இல்லாதவர் என்று பொருள். 

வி – இதற்கு மேல் இல்லை. நாயகர் -- தலைவர். 

வினாயகர் அஷ்டோத்திரத்தில் ஓம் அநீஸ்வராய நம என்ற ஒரு வரி உள்ளது. அதாவது தனக்கு மேல் ஒரு ஈஸ்வரன் இல்லாதவர் என்பதாகும். ஆதிசங்கரர் தனது பஞ்ச ரத்தினம் என்ற வினாயகர் துதியில் அநாயக ஏகநாயகம் என இவரைக் குறிப்பிடுகிறார். தனக்கு மேல் ஒரு தலைவர் இல்லாமல் ஒரே மூலப்பொருளாய் எல்லாவற்றிற்கும் தலைவராய் இருப்பவர் என்பதாகும். பூத கணங்களிற்கு தலைவராய் அதாவது கணங்களிற்கு அதிபதியாய் இருப்பதனால் கணபதி என அழைக்கப்பட்டார். நமது கஷ்டங்களை, வினைகளை, விக்கினங்களை நீக்குபவர் என்பதனால் விக்னேஸ்வரர் ஆனார். யானை முகத்தினன் என்பதனால் கஜானனன் என்றும், மோதகத்தை விரும்பி உண்பதனால் லம்போதரன், மோதகப்பிரியன் என்றும், ஒரு தந்தத்தை உடையவர் என்பதனால் ஏகதந்தன் என்றும் வழங்கப்படலானார்.

ஐந்து கரத்தினன் எனப்படும் இவர் துதிக்கையுடன் ஐந்து கரத்தினை கொண்டவர். துதிக்கையில் புனித நீர்க்குடம், வலது கைகளில் ஒன்றில் அங்குசமும், மற்றயதில் ஒடிந்த தந்தமும், இடது கைகளில் ஒன்றில் பாசமும், மற்ற கரத்தில் மோதகமும் வைத்திருப்பார். புனித நீர்க் குடத்திலிருக்கும் புனித நீரினைக் கொண்டு உலக வாழ்வில் உழன்று, களைத்து, சோர்வடைந்து தன்னைச் சரணடையும் மக்களின் தாகம் தீர்த்து, களைப்பைப் போக்கி, பிறவா நிலையைக் கொடுத்து தன்னடியில் சேர்த்துக் கொள்கிறார். இதற்கு அவ்வையாரின் வாழ்க்கை சிறந்த உதாரணமாகும். “என்னை அறிவித்து எனக்கு அருள் செய்து முன்னை வினையின் முதலைக் களைந்து வாக்கும் மனமும் இல்லா மனோலயம் தேக்கியே எந்தன் சிந்தை தெளிவித்து” அவ்வையார் தனது வினாயகர் அகவலில் மேற்க் கண்ட வரிகளினாலும் மற்றும் வினாயகர் அகவலில் பல இடங்களிலும் வினாயகர் தன்னை ஆட்கொண்டு தனக்கு அருள் செய்த விதத்தினை கூறியுள்ளார்.

அங்குசம் என்பது யானையை அடக்க உதவும் ஒரு கருவி ஆகும். இவர் கையில் இருக்கும் அங்குசமோ ஆசை என்ற மாய வலையில் சிக்கி அலைந்து திரியும் மனத்தினை அடக்கி ஒருநிலைப்படுத்தி பேரின்ப வீட்டினை தரவல்லது. பாசக் கயிற்றினால் மனித மனங்களில் ஆசாபாசங்களைக் கட்டிப் போடுகிறார். ஒடிந்த தந்தம் மகாபாரதம் என்ற காவியத்தை எழுத பயன்பட்டது. நமது மனங்களில் ஞானத்தை, உண்மை அறிவை எழுதுகிறார். மோதகம் அமுத கலசமாகும். இந்த மோதகத்தினால் மக்களிற்கு அமுதத்தை வழங்கி பிறப்பிறப்பு இல்லாத பேரின்ப நிலையயை அருளுகிறார். 

வினாயகர் ஓங்கார சொரூபமானவர். அவருக்கு செய்யும் வணக்கம் பிரம்மத்தையே சேருகிறது. வினாயகரை வணங்குதல் எல்லா தெய்வங்களையும் வணங்கியதற்கு ஒப்பாகும். பிடித்து வைத்தால் பிள்ளையார் என்று ஒரு வழக்கு மொழியும் கிராமப் புறங்களில் உள்ளது. அதாவது மஞ்சள் பொடி, பசும் சாணம் இதர சில பொருட்களினால் பிடித்து வைத்து பிள்ளையாரை ஆவாகணம் செய்து வழிபடலாம். மற்ற எல்லா வழிபாட்டிலும் மிக எளிமையாக வழிபடக் கூடியது வினாயகர் வழிபாடே. 

வினாயகர் சதுர்த்தி:-

ஒரு சமயம் வினாயகர் கைலையில் நடனமாடிக் கொண்டிருந்தார் இவரின் நடனத்தை பார்த்து சந்திரன் ஏளனமாக சிரித்தான். இதனால் கோபம் கொண்ட வினாயகர் சந்திரனை “இன்று முதல் சந்திரன் உருவத்தை யாரும் காணமாட்டார்கள். கண்டவரும் நிந்தை செய்து ஒதுக்குவார்கள். இப்படிப்பட்ட நீசனாகட்டும்” என்று சபித்து விட்டார். இதன் காரணமாய் சந்திரன் கலையிழந்து தேய்ந்து மெலிந்தான். சந்திரன் தன் செய்கைக்கு மிகவும் வருந்தி பின்னர் வினாயகரயே சரண் அடைந்தான். தன்னை சரண் அடைந்தோரிற்கு சகல நன்மைகளையும் தரும் கருணை கடலாம் மூஷிக வாகனன் எம்பெருமான் வினாயகரும் மனமிரங்கி சுக்ல பட்ச சதுர்த்தி திதியில் சந்திரனைக் காண்போர் வீணான சங்கடங்களிற்கு ஆளாவர் என்றும். ஆனால் ஆவணி மாதம் சுக்ல பட்ச சதுர்த்தி திதியில் விரதம் அனுட்டித்து வினாயகரை வணங்குபவர்கள் சகல சாப விமோசனமும் பெற்று சீரும் சிறப்புடனும் வாழ்வர் என சந்திரனிற்கு சாப விமோசனம் அருளினார். அதனால்; தான் வளர்பிறையில் வரும் நாலாம் நாள் சந்தினை யாரும் இன்றும் பார்ப்பது கிடையாது. “நாலாம்பிறைச் சந்திரனை பார்த்தால் நாய் அலைச்சல்” என்று கிராமத்து மக்கள் இன்றும் கூறுவர். ஆவணி மாதம் சுக்ல பட்ச சதுர்த்தி திதியே வினாயகர் சதுர்த்தி நாளாகும்.


ஜோதிட ரீதியாக வினாயகர் வழிபாடு:-

1. மேடம், கடகம், துலாம், மகரம் ஆகிய சரலக்னங்களில் ஒரு லக்னம் உதிக்க சித்திரை, உத்திராடம், ரேவதி நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் வளர்பிறையில் வரும் சனிக்கிழமைகளில் சூரிய உதயத்திற்கு பின்னர் வரும் 1மணி 30 நிமிடத்திற்குள் அண்ணளவாக காலை 6.00 மணி முதல் 7.30 இற்குள் தேங்காய் பலி கொடுத்து (தேங்காய் உடைத்து), அருகம்புல்லினால் வினாயகரை அர்ச்சனை செய்து சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தேனும் பாலும், உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மோதகமும், ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பாசிப்பயறும் நைவேத்தியம் செய்து வெற்றிலை, பழம், பாக்கு வைத்து வழிபடவேண்டும். மேற்கூறிய லக்னங்கள் உதிக்க மற்றய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் வளர்பிறை செவ்வாய், சனிக் கிழமைகளில் தேங்காய் பலி கொடுத்து, செவ்வரலி புட்பத்தினால் வினாயகரை அர்ச்சனை செய்து, பசும்பால், அப்பம், வடை, அவல், பொரிகடலை நைவேத்தியம் செய்து வெற்றிலை, பழம், பாக்கு வைத்து வழிபடவேண்டும். இதனால் எடுத்த காரியங்களில் இடர் நீங்கி காரிய சித்தி உண்டாகும். சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.

2. ரிசபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய ஸ்திர லக்னங்களில் ஒரு லக்னம் உதிக்க எந்த நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும் வளர்பிறை செவ்வாய், சனிக்கிழமைகளில் விடியற்காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் அதாவது காலை 4.00 மணிமுதல் 6.00 மணி வரையான காலத்தில் தேங்காய் பலி கொடுத்து(தேங்காய் உடைத்து), வெள்ளெருக்கு மலர் அல்லது வெள்ளரலி மலர் அல்லது வெண்தாமரை மலரினால் அர்ச்சனை செய்து, பசும் பால், அவல், கொண்டக்கடலை சுண்டல், பாசிப்பயறு நைவேத்தியம் செய்து வெற்றிலை, பழம், பாக்கு வைத்து வழிபடவேண்டும். இதனால் எடுத்த காரியங்களில் இடர் நீங்கி காரிய சித்தி உண்டாகும். சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.

3. மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய உபய லக்னங்களில் ஒரு லக்னம் உதிக்க எந்த நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும் வளர்பிறை செவ்வாய், சனிக்கிழமைகளில் சந்தியா காலத்தில் அதாவது காலை 5.15மணி முதல் 6.45மணி வரையிலான காலத்தில் தேங்காய் பலி கொடுத்து(தேங்காய் உடைத்து), மல்லிகைப் பூ அல்லது முல்லைப் பூ அல்லது செந்தாமரை மலரினால் அர்ச்சனை செய்து பசும் பால், பால்ப்பாயாசம், பானகம் நைவேத்தியம் செய்து வெற்றிலை, பழம், பாக்கு வைத்து வழிபடவேண்டும். இதனால் எடுத்த காரியங்களில் இடர் நீங்கி காரிய சித்தி உண்டாகும். சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனிநுடங்காது பூக்கொண்டு துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன் கோலம் செய் துங்கக்கரி முகத்து தூமணியே நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்தின் இளம் பிறை போலும் மெயிற்றனைநந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே

வினாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்வினாயகனே வேற்கை தணிவிப்பான்வினாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்தன்மையினால் கண்ணில் பணிமின் கனிந்து

அல்லல் போம் வல்வினை போம் அன்னை வயிற்றில் பிறந்த தொல்லை போம் போகாத் துயரும் போம் நல்ல குணம் அதிகமாம அருணை கோபுரத்துள் மேவும் கணபதியைக் கை தொழுதற்க்கால்!!!

விநாயகருக்கு 21 வகை இலை அர்ச்சனை



விநாயகர் சதுர்த்தியன்று 21 வகையான இலைகளைக் கொண்டு ஜபத்திரகள்ஸ அர்ச்சிப்பது சிறந்தது எனப்படுகின்றது. வகைக்கு 21 பதிரங்களைத் தேர்ந்து கொள்வது நலம் பல பயக்கும் என்பர். அவ்வாறான பத்திரங்களும், அவற்றைக் கொண்டு அர்ச்சிப்பதனால் அடையக்கூடிய பலாபலன்கள் பற்றிய விபரங்களும் வருமாறு:-1. முல்லை இலை: அறம் வளரும்2. கரிசலாங்கண்ணி இலை: இவ்வாழ்க்கைக்குத் தேவையான பொருள் சேரும்.3. விஸ்வம் இலை: இன்பம், விரும்பியவை அனைத்தும் கிடைக்கும்.4. அருகம்புல்: அனைத்து சவுபாக்கியங்களும் கிடைக்கும்.5. இலந்தை இலை: கல்வியில் மேன்மையை அடை யலாம்.6. ஊமத்தை இலை: பெருந்தன்மை கைவரப் பெறும்.7. வன்னி இலை: பூவுலக வாழ்விலும், சொர்க்க வாழ்விலும் நன்மைகள் கிடைக்கப் பெறும்.8. நாயுருவி: முகப் பொலிவும், அழகும் கூடும்.9. கண்டங்கத்திரி: வீரமும், தைரியமும் கிடைக்கப் பெறும்.10. அரளி இலை: எந்த முயற்சியிலும் வெற்றி கிடைக்கும்.11. எருக்கம் இலை: கருவிலுள்ள சிசுவுக்கு பாதுக்காப்புக் கிடைக்கும்.12. மருதம் இலை: மகப்பேறு கிடைக்கும்13. விஷ்ணுகிராந்தி இலை: நுண்ணிவு கைவரப் பெறும்.14. மாதுளை இலை: பெரும் புகழும் நற்பெயரும் கிடைக்கும்.15. தேவதாரு இலை: எதையும் தாங்கும் மனோ தைரியம் கிடைக்கும்.16. மருக்கொழுந்து இலை: இல்லற சுகம் கிடைக்கப் பெறும்.17. அரசம் இலை: உயர் பதவியும், பதவியால் கீர்த்தியும் கிடைக்கும்.18. ஜாதிமல்லி இலை: சொந்த வீடு, மனை, பூமி பாக்கியம் கிடைக்கப் பெறும்.19. தாழம் இலை: செல்வச் செழிப்புக் கிடைக்கப் பெறும்.20. அகத்தி இலை: கடன் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும்.21. தவனம் ஜகர்ப்பூரஸ இலை: நல்ல கணவன்- மனைவி அமையப் பெறும்.





விநாயகர் 12 அவதாரம்



விநாயகர் 12 அவதாரங்கள் எடுத்ததாக விநாயக புராணம் என்ற நூல் கூறு கிறது.வக்ரதுண்ட விநாயகர்:பஇவர் உலகம் ஒவ்வொரு முறை அழியும் போது தோன்றி, மீண்டும் உலகத்தை படைப்பதற்கான வழிமுறைகளை பெருமாள், பிரம்மா, ருத்ரன் (சிவவடிவம்) ஆகியோருக்கு அருளுவார்.கஜானனபவிநாயகர்: சிந்தூரன் என்ற அரக்கனை அழிப்பதற்காக அவதரித்தவர்.விக்கிரனபராஜர்: காலரூபன் என்ற அரக் கனை கொல்வதற்காக பிறந்தவர்.மயூரேசர்: பிரம்மாவிடம் இருந்த வேதங்களை கமலாசுரன் என்ற அசுரன் திருடிச்சென்றபோது மயில் வாகனத்தில் சென்று அவனை வென்று வேதங்களை மீட்டவர்.உபமயூரேசர்:சிந்தாசுரன் என்ற அசுரன் தேவர்களை சிறை வைத்தபோது அவனை அழித்தவர்.பாலச்சந்திரர்:தூமராசன் என்ற அசுரனை கொன்றவர்.சிந்தாமணி:கபிலர் என்ற முனிவரிடம் இருந்த சிந்தாமணி என்ற அற்புத பொருளை கனகராஜன் என்பவன் திருடிச் சென்றான். உயிர்காக்கும் இந்த சிந்தாமணியை அவனிடமிருந்து மீட்டவர்.கணேசர்:பலி என்ற அசுரன் தேவர்களை துன்புறுத்தியபோது, 5 முகத்துடன் தோன்றி அவனை அழித்தவர்.கணபதி:கஜமுகாசுரனை வென்றவர்.மகோற்கடர்:காசிராஜன் என்ற புகழ்பெற்ற அரசனுக்கு நராந்தகன், தேவாந்தன் என்ற கொடியவர்கள் துன்பம் செய்து வந்தனர். இதனால் உலகத்தில் தர்மம் அழிந்தது. அவர்களை நாசம் செய்ய அவதரித்தவர்.துண்டி:துராசதன் என்ற அசுரனை வென்றவர்.வல்லபை விநாயகர்:மரீச முனிவரின் மகளான வல்லபையை திருமணம் செய்தவர்.டிக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.





விநாயகர் சிலை முன்பு நின்று தலையில் குட்டிக் கொள்ளும் பழக்கம் எப்படி தோன்றியது தெரியுமா? 



* விநாயகர் முன் தோப்புக் கரணம் இடுவதனால் அறிவு வளர்ச்சியும், உடல் நலமும் உண்டாகும். அகத்திய முனிவர் சிவனிடம் இருந்த காவிரி நதியைக் கமண்டலத்தில் அடக்கிக் கொண்டு தென்திசை நோக்கி வரும்போது குடகு மலையில் சிவ பூஜை செய்து கொண்டு இருந்தார். அப்போது இந்திரன் சீர்காழியில் பூஜை செய்து கொண்டிருந்தான். 



மழையின்றி நந்தவனம் வாடியது. நாரத முனிவர் இந்திரனை பார்த்து, "அகத்தியருடைய கமண்டலத்தில் உள்ள காவிரி பெருகுமானால் உன் பூங்கா பொலிவு பெறும்'' என்று கூறினார். இந்திரன் விநாயகரை வழிபட்டு வேண்டிக் கொண்டான். விநாயகர் காக்கை வடிவம் எடுத்து சென்று காவிரி அடங்கிய கமண்டலத்தின் மீது அமர்ந்தார். 



அகத்தியர் காகத்தைக் கரத்தால் ஓட்டினார். காகம் காலால் உந்திப் பறந்தது. கமண்டலம் கவிழ்ந்து காவிரி பெருக்கெடுத்து ஓடியது. அகத்தியர் காகத்தின் மீது சீறிப்பாய்ந்தார். அது சிறுவனாகி நின்றது. அச்சிறுவனை இரு கரங்களாலும் குட்டும் பொருட்டுக் குறுமுனி ஓடினார். பிள்ளையார் அவருக்கு அகப்படாமல் அங்கும் இங்குமாக ஓடினார். 



அகத்தியர் அச்சிறுவனை அணுகிக் குட்டுவதற்கு இரு கரங்களையும் ஓங்கினார். ஐங்கரங்களுடன் விநாய க்ஷ்கர் காட்சி தந்தருளினார். அகத்தியர் திகைத்து போனார். விநாயகப் பெருமானே உம்மைக் குட்டுவதற்கா கையை ஓங்கினேனே? என்று தன் தலையிலேயே குட்டிக் கொண்டார். 



விநாயகர் அவருடைய கரங்களைப் பற்றி "இன்று முதல் என் முன் பயபக்தியுடன் தலையில் குட்டிக் கொண்டோர் கூரிய மதியும் சீரிய நிதியும் பெறு வார்கள்'' என்று அருளினார். இதனால் விநாயகர் முன் பக்தர்கள் தலையில் குட்டிக் கொள்ளும் மரபு உண்டாயிற்று.*



பிள்ளையாரை முதல் வழிபாடு ஏன்?



வராக புராணத்தில் இதற்கொரு கதை சொல்லப்பட்டுள்ளது. ஒரு சமயத்தில் சௌனகாதி முனிவர்கள் ஒன்று கூடி தாங்கள் செய்கிற எல்லா நற்செயல்களும் சரிவர நடக்காமலும் பூர்த்தி அடையாமலும் போய் விடுவதாகவும் எண்ணிக் குழப் பம் அடைந்தனர். இதற்குத் தீர்வு காண பரமேஸ்வர னிடம் சென்று முறையிட்டனர். 



பரமன் தனது தர்ம பத்தினி யாம் பார்வதி தேவியை ஞானக் கண் ணால் உற்று நோக்கி னார். அந்த சமயத் தில் அதிசயிக் கும் வகை யில், மோகன வடிவத்தில், எல்லோரை யும் கவர்ந் திழுக் கும் அழகோடு பிள்ளை ஒருவன் தோன்றினான். 



மற்றவர்களது கண்கள் படாமல் இருக்கப் பார்வதி தேவியானவர் பிறரை மயங்கச் செய்யும் இந்த அழகான வடிவத்தை விடுத்துப்பருமனான தொந்தியும் யானைத் தலையும் ஏற்பாய் என்று சொல்லி உருவத்தை மாற்றினாள். பரமன் தன் பிள்ளையை அழைத்து, விநாயகன் என்று பெயர் சூட்டிக் கனங்களுக்கெல்லாம் தலைவனாக நியமனம் செய்தார். 



இனிமேல் எந்தக் காரியங்கள் செய்தாலும் அவரை வைத்தே தொடங்கப்பட வேண்டும் எனவும், இல்லையெனில் அதற்குத் தடைகள் ஏற்படும் என்றும் அறிவித்து விட்டார். அன்றைய நாள் முதல் இந்நாள் வரை பிள்ளையாரை முதலில் வழிபடும் முறை வழக்கத்திற்கு வந்தது.





32 விநாயகர் மூர்த்தங்கள்



1. பால கணபதி 2. தருண கணபதி3. பக்தி கணபதி 4. வீர கணபதி 5. சக்தி கணபதி 6. துவிஜ கணபதி 7. சித்தி கணபதி 8. உச்சிட்ட கணபதி 9. விக்ன கணபதி 10. க்ஷிப்ர கணபதி 11. ஏரம்ப கணபதி 12. லட்சுமி கணபதி 13. மஹா கணபதி 14. விஜய கணபதி 15. நிருத்த கணபதி 16. ஊர்த்துவ கணபதி 17. ஏகாட்சர கணபதி 18. வர கணபதி 19. திரயாக்ஷர கணபதி 20. க்ஷிப்ரபிரசாத கணபதி 21. ஹரித்திரா கணபதி 22. ஏகதந்த கணபதி 23. சிருஷ்டி கணபதி 24. உத்தண்ட கணபதி 25. ரணமோசன கணபதி 26. துண்டி கணபதி 27. துவிமுக கணபதி 28. மும்முக கணபதி 29. சிங்க கணபதி 30. யோக கணபதி 31. துர்க்கா கணபதி 32. சங்கடஹர கணபதி



விநாயகர் உருவத் தத்துவம்



தத்துவங்கள் தோன்றும் முறையில் முதற்கண் சுத்தமாயையில் இருந்து `ஓம்` என்ற பிரணவ நாதமே தோன்றியது. பிள்ளையார் பிரணவ வடிவினர் ஆதலால் `பிரணவன்' என்றும் `மூத்த பிள்ளையார்' என்றும் அறியப்படுகின்றது. `ஓங்கார நாத தத்துவம்` சிவனையும் சுட்டி நிற்பதால் சிவனும், பிள்ளையாரும் ஒன்றேயென்றும் கொள்ளமுடிகின்றது. 



பிரணவத்தை முற்றறிந்தவர் என்பதால் பிரணவன், பிரணவநாதன் என்றெல்லாம் அழைக்கப்படுகின்றார். `ஓம்` என்ற பிரணவ மந்திர ரூபியான அவர் ஞானமே வடிவானவர். அவரது திருமேனிய ஒரு தத்துவ வித்தென ஆன்றோர் விஸ்தரித்துள்ளனர். அவருடைய இரு திருவடிகளிலே வலது திருவடியை "முற்றறிவு'' அதாவது `ஞானசக்தி' என்றும்" இடது திருவடியை "முற்றுத்தொழில்'' அதாவது `கிரியாசக்தி' என்றும் உணர்த்தப்படுகின்றது. 



அவ்விரு திருவடிகளின் துணையின்றி உயிர்கள் ஒன்றினை அறிந்து கொள்ளவோ, செயலாற்றவோ முடியாது. எல்லாப் பொருட்களையும் ஆகாயம் தன்னுள் அடக்கவும், உண்டாக்கவும், விரிக்கவும், ஒடுக்கவும் கூடிய தன்மையைக்கொண்ட பரந்து விரிந்ததொரு பூதம். ஆகாயம் போலவே சகலவற்றையும் உள்ளடக்கியதாகவே அவரது பேருந்தி காட்சி கொடுக்கின்றது. 



படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய பஞ்ச கிருத்தியங்களையும் அவர் தனது ஐந்து கரங்களால் இயற்றுகின்றார் எனப்படுகின்றது. ஐந்து கருமங்கட்கும் அவரே அதிபதி என்பதனால் அவருக்கு `ஐங்கரன்' என்ற நாமம் விளங்குகின்றது. அவரை `பஞ்சகிருத்திகள்' என்றும் கூறுவர். 



அவரது முற்றறிந்த ஞானத்தை முறம் போன்று பரந்து விரிந்த இருசெவிகளும் விளக்குகின்றன. வலது பக்கமுள்ள ஒடிந்த கொம்பு "பாசஞானத்தையும்` இடது பக்கமுள்ள கொம்பு "பதிஞானத்தையும்` உணர்த்துவதாக உள்ளன. விநாயகரின் அடிக்கீழ் மூஷிகம் அழுந்தி அமைதியாகக் காணப்படுவதை, பிரணவ மூர்த்தியின் அடிக்கீழ் ஆணவ மலம் வலிகெட்டு அமைதி காக்கும் என்பதை விளக்குகின்றது.



அவரது உந்தியைச் சுற்றியுள்ள சர்ப்பம் `குண்டலினி சக்தியின்' வடிவம் என்பர். அதன் விரிவுகளும், சுருக்கங்களுமே பிரபஞ்சத்தின் தோற்றம், சுருக்கம் எனப்படுகின்றது. அதை அவர் உந்தியில் அணிந்திருப்பதானது, உலகிற்கு நிமித்த காரணர் அவர்தாம் என்பதையும் உணர்த்துகின்றது. மேலும் விநாயகர் முக்கண் உடையவரெனவும் விளக்கப்பட்டுள்ளது. முக்கண்ணுடைய பெருமை சிவனுக்கே உரியது. 



ஆயினும் கிரியா வழி, ரூப வழி நோக்குமிடத்து சிவனும் பிள்ளையாரும் ஒன்றே எனும் தத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம். மேலும், விநாயகருக்கு `சித்தி', `புத்தி' என இரு சக்திகள் உள்ளதாகவும் புராணங்களில் பேசப்படுகின்றது. 



விநாயகரின் வலது முன்கை அபய முத்திரையக் காட்டும், வலது பின்கையில் மழுவாயுதமும், இடது முன்கையில் மோதகம் அல்லது மாதுளம்பழம் வைத்திருப்பது போலவும், இடது பின்கையில் பாசக் கயிறோ அல்லது செந்தாமரை மலரோ கொண்டிருப்பது போலவும் சித்தரிக்கப்படுகின்றது. துதிக்கையில் நீர்க் கலசம் ஜகமண்டலம் ஒன்றை ஏந்தியிருப்பார். 



செம்பட்டு வஸ்திரத்தையே அணிந்திருப்பார். விநாயகருக்கு உகந்த முக்கிய நிவேதனப் பொருட்கள் மோதகம், கொழுக்கட்டை பஞ்சாமிர்தம், தேங்காய், அப்பம், அவல், பொரி, கரும்பு, சர்க்கரை முதலியனவாகும். செம்மலர்கள், அறுகம் புல் ஆகியவற்றைக் கொண்டு விநாயகரை அர்ச்சிப்பது மிகச் சிறந்தது. 



உலகிலுள்ள சைவ மக்கள் எதையாவது எழுதத் தொடங்கும் பொழுதும், எழுதும் தாளின் தலைப்பில் முதலாவதாக பிள்ளையார் சுழி எழுதிய பின்னரே விடயத்தை எழுதத் தொடங்குவர். பிள்ளையார் சுழி `ள' என்ற ஒரு வட்டமும் ஒரு கோடும் இணந்து இருக்கும். இதற்கு ஒரு தத்துவம் உண்டு, புஜ்ஜியமன வட்டதை `0' பிந்து என்றும், தொடர்ந்துவரும் கோட்டை `' நாதம் என்றும் கொள்கின்றனர். 



எனவே பிள்ளையார் சுழியை `நாதபிந்து' என்பர். பிள்ளையாருடன் சிவசக்தியின் இணைப்பை இது உணர்த்துவதாக உள்ளதெனக் கூறப்படுகின்றது. எக்கருமத்தையும் ஆரம்பிப்பதற்கு முன்னர் பிள்ளையாரை வழிபட்ட பின்னரே ஆரம்பிக்கும் வழக்கம் சைவ மக்களிடையை காலாதிகாலமாக நிலவிவருகின்றது. அவரை வழிபட்டுத் தொடங்கினால் செய்கருமம் இடையே எதுவித விக்கினங்களும் இன்றி நிறைவுபெறும் என்பது இந்துக்களின் நம்பிக்கை .



யானை முகனுக்கு உகந்த நான்கு லட்ச ஜப வழிபாடு





விநாயகருக்குப் பல வழிபாடுகள் வித்யாசமான முறையில் இருப்பதை காண பத்ய முறையிலும் விநாயகப் புராணத்திலும், காணலாம். சகங்ரநாமம் என்கிற ஆயிரத்தெட்டு நாமங்கள் தொகுப்பில் கணபதியின் பூரண அருளைப்பெற்றிட சதுர் லட்ச ஜபம் எனனும் நான்கு லட்சம் மூலமந்திர உச்சரித்தல் வழிபாட்டைச் செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 



அதாவது கணபதி சகஸ்ரநாமத்தில் உள்ள 1016-வது நாமா வளியில்லும் சதுர்லட்ச ஜபப்ரீதாயை நம என்று வருகிறது. அடுத்ததாக வரும் 1017-ம் நாமாவனியில் ஓம் சதுர்வசட்ச ஜபப்ரகாசிதாய நம: என்று வருகிறது. 



அதாவது நான்கு லட்சம் மூல மந்திர ஜபம் செய்பவர்களுக்கு விநாயகர் கனவில் ப்ரசன்னமாகி வேண்டும் வரங்களை அருள்வார் என்று பொருள். சதுராவர்த்தி தர்ப்பணம் என்ற விதிப்படி இந்த பூஜையைச் செய்பவர்களுக்கு அபரிமிதமான நற்பலன்கள் மங்களங்கள் உண்டாகும் என்பது பெரியோர்கள் மற்றும் கணபதி உபாசகர்களின் கருத்து. 



சதுர் ஆவர்த்தி தர்ப்பண பூஜை செய்முறை:......... 



விநாயகர் வழிபாடு மட்டும் அல்லாமல் மற்ற எல்லா தெய்வங்களுக்கும் விசேட வழிபாடுகள் செய்யும் பொழுத ஹோமம் செய்வது முதல் அங்கமாக விளங்குகிறது. விநாயகருக்குச் சதுராவர்த்தி என்கிற நான்கு லட்சம் ஜபம் செய்கின்ற போது முதலில் அஷ்ட திரவியம் என்ற எண் வனகக் கலவையால் 10 % ஹோமம் செய்தல் வேண்டும். 



மோதகம், அப்பம், கரும்பு துண்டு, அவல், எள், வாழைப்பம் சத்துமாவு, நெல்பொறி, ஆகியன மேலும் இந்த வகை ஹோம பூஜையின் போது சமர்ப்பிக்கப்படுகிற சமித்துக்களுக்கும் ஒவ்வொரு வேண்டுதல்கள் இருக்கின்றன. சமித்து ஓம குச்சிகள். அத்தி குச்சியால் ஓமம் செய்ய - மக்கட் பேறு உண்டாகும். நாயுருவி குச்சி- மகாலட்சுமி கடாட்சம் ஏற்படும். எருக்கன் குச்சி- எதிரிகள் இல்லாத நிலை உருவாகும். 



• அரசங்குச்சி- அரசாங்க நன்மையை எதிர்பார்க்கலாம் • கருங்காலிக் கட்டை- ஏவல்கல் பில்லி சூன்யங்கள் விலகிவிடும். • வன்னிக்குச்சி- கிரஹத் கோளாறுகள் நீங்கி விடும். • புரசங்குச்சி- குழந்தைகளின் கல்வி வளர்ச்சி• வில்வக்குச்சி- செல்வம் சேர வாய்ப்பு உண்டாகும் • அருகம்புல்- விஷபயம் நீங்கும். * ஆலங்குச்சி- புகழைச் சேர வைக்கும். • நொச்சி- காரியத்தடை விலகி வழக்குகளில் வெல்லச் செய்யும். 



யக்நத்தைச் செய்த பிறகு தர்ப்பணம் 10% செய்தல் வேண்டும். மகாகணபதியின் மூல மந்திரத்தைக் கூறி 108 தடவைகள் அல்லது 54 முறை, ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் கணபதியே சர்வ ஜனம்மே வசமாயை ஸ்வாஹா சித்தலட்சுமி சமேத ஸ்ரீமகா கணபதிம் தர்ப்பயாமி மிகச் சிறிய மகாகணபதி சிலையை இரு தட்டில் வைத்து அதில் இந்த யந்திர கேசை வடிவை போட்டு மகா கணபதியைப் பிரார்த்தனை செய்து கொண்டு தொடர்ந்து இந்த 54 தர்ப்பண வழிபாட்டைச் செய்ய வேண்டும். 



கணேசருக்கு தர்ப்பணமிடும் போது கடைசியில் கிழுள்ள பிரார்த்தனையை மனதுக்குள் மானசீக மந்திரமாகச் சொல்லிக் கொள்ளலாம். 



1. எனது சங்கடங்கள் அனைத்தும் விலகிடச் செய்வாய் ஸ்ரீகணபதியே 2. நவக்கிரகங்கள் ஒன்பதும் நன்மையே அருளச் செய்வாய். 3. சகல விதமான தோஷங்களும் என்னை விட்டுப் போகட்டும் 4. எல்லா விதமான வருத்தங்களும் என்னை விட்டு அகல வேண்டும் 5. துக்கங்களிலிருந்து நிவாரணம் எனக்குக் கிடைக்கட்டும். 6. என்னுடைய தாபங்கள் தீர்ந்து விட அருள் செய்வாய்.7. பாவங்கள் என்னிடம் நெருங்காமல் போகட்டும். 8. என்னை வாட்டுகிற நோய்கள் உடலை விட்டு ஓடிவிடட்டும் 9. எதிரிகள் என்னை விட்டு விலகிப் போவார்களாக 10. உடல் சார்ந்த நோய்கள் தீர்ந்து போகட்டும் 11. என்னைச் சுற்றுகிற பீடைகள் மறைந்து விடட்டும் 12. எனக்கு பயம் என்பதே இல்லாமல் போக வேண்டும். 13. எனக்கு சத்ரு உபாதைகள் தொந்தரவுகள் அகலட்டும் 14. கெட்ட சம்பவங்கள் வராமல் தடுக்கப்பட வேண்டும். 15. கெட்ட கனவுகள்வராமலேயே நசிந்து போகட்டும். 16. தரித்திரம் என்ற சொல்லுக்கு இடமின்றி போக வேண்டும். 17. தீய சக்திகள் நெருங்காமல் விலகியே இருக்கட்டும். 18. என்னைக் கடும் விஷம் பாதிக்கப்படாமல் இருக்கட்டும் 19. எல்லா வகையிலும் லாப நிலைகள் வந்து அடையட்டும். 20. நெருங்குகிற போதே நோய்கள் நசிந்து குலையட்டும். 21. தீய நினைவுகள் என்னிடம் வராமல் போகட்டும். 22. சம்பத்துக்கள் மலைபோல வளரட்டும் 23. மனம் போல விருப்பங்கள் நிறைவேறட்டும் 24. நான் வசிக்கும் இல்லத்தில் மங்களங்கள் உண்டாகட்டும். 25. உலகத்திற்கு உரிய நலன்களைக் கொடுப்பாயாக. 26. எனக்குள் அபூர்வ சக்திகள் வந்து சேரட்டும். 27. என் வாழ்வில் பேரன் பேத்திகள் உருவாக வேண்டும். 28. எப்போதும் சுப நிகழ்வுகளையே அருளுவாய். 29. கல்வி அறிவு அபரிமிதமாக வளர்ந்து விடட்டும் 30. எங்கும் எப்போதும் சாந்தி நிலவிட அருள்க. 31. நான் சொல்லும் மந்திரங்கள் சித்தியாக வேண்டும். 32. எனது சொல்லும் வாக்கும் பலருக்கும் பயனாக அருள்வாய். 33. நான் செய்யும் யந்திர பூஜை சித்தியைத் தரட்டும் 34. நான் பயின்ற தந்திர சாஸ்திரங்கள் வெற்றியைத் தரட்டும் 35. முழுமையான வாழ்நாளை எனக்குத் தந்தருள்வாய் 36. என் நினைவுகளில் நல்லதே வந்து உதிக்கட்டும். 37. மனதில் தோன்றும் விருப்பங்களை வெற்றி அடையச் செய்வாய்.38. எனக்கு எப்போதும் மன நிம்மதியைக் கொடுப்பாயாக. 39. எனக்கு விருப்பம் எனத் தோன்றுவதைத் தந்து விடுக. 40. திரியும் விலங்குகள் எனக்கு வசமாக வேண்டும். 41. அனைவருக்கும் சுகாதாரத்தை வளரச் செய்வாய். 42. மனதில் வைராக்கியத்தை வளரச் செய்திடுக. 43. உலகில் எல்லா யோக பாக்யங்களும் சேர்ந்திட அருள்வாய். 44. என் ஆத்மா புனிதத்தன்மை அடைந்து விடட்டும். 45. என் குருவிடம் நான் அதிகமான பக்தி கொள்ச் செய்வீராக. 46. எனது சுயரூபத்தைப் பிரகாசமடையச் செய்வீராக. 47. கலிகாலத்தின் தோஷம் எங்களை விட்டு அகல வேண்டும். 48. தனம், தான்யங்கள் வளர்ந்து செழிக்க வேண்டும். 49. குடும்பத்தில் சூன்யங்கள் பிறரால் வைக்கப்படாமல் போகட்டும். 50. மனவருத்தங்கள் கணவன- மனைவியரிடையே வராமல் இருக்கட்டும். 51. மனக்கிலேசம் விலகி அன்பு பெருகட்டும். 52. வேண்டாத பயம் என் மனதை விட்டு நீங்கி விடட்டும் 53. அனைத்து பூத ப்ரேத பிகாச உபத்திரவங்கள் விலகி விடட்டும். 54. வழக்கு வெற்றி முதல் சகல காரியங்களிலும் வெற்றியே தொடரட்டும் 



மகா கணபதியே! தர்ப்பண பூஜை முடிந்த பிறகு சுற்றுப்புறங்களில் அங்கு வைக்கப்பட்ட கலசத்தில் உள்ள நீரை பார்ஜனம் என்ற வகையில் தெளித்தல் வேண்டும். பொதுவாக ஒரு பூஜை செய்யும் வகைகளில் விநாயகர் வழிபாடு முதல் கலச பூஜை, அக்னி ஓமம் என்று வசைப்படுத்தப்படும் பூஜாவிதி இச்த சதுராவர்த்தி தர்ப்பண பூஜையில் மட்டும் விநாயகர் வழிபாடு. வரிசையாக ஜெபம். 



யக்ஞம், தர்ப்பணம் (நீர் வார்த்தல்), மார்ஜனம் (தெளித்தல்), என்று அமைகிறது. இங்கே அபரிமிதமான பலன்களைத் தரக் கூடிய சதுர் ஆவர்த்தி தர்ப்பண பூஜை எளிமையாக உலக நலன் பொருட்டு கொடுக்கப்பட்டுள்ளது. பலர் கூடிப் பலன் பெற செய்ய நினைப்பவர்கள் விநாயகர் கோவில், மற்ற ஆலயங்களில் உள்ள விநாயகர் சன்னதி மண்டபங்களில் பொதுவாகச் செய்யலாம். 



விரிவாகக் செய்யும் இந்த வழிபாட்டு முறையில் நான்கு லட்சம் ஆவர்த்திகள் (தடைகள்) மூலமந்திர ஜெபமும் 40,000, ஆவர்த்திகள் அக்னி ஹோமமும். 4,000 ஆவர்த்திகள்- தர்ப்பண முறையும் 400 ஆவர்த்திகள் மார்ஜனம், என்ற தெனித்தல் நிகழ்வும் அடங்குகின்றன. அதாவது 4,444 என்று மொத்தம் 16 ஜக் காட்டுகிற இதன் எண்ணிக்கை முறை 16 லட்சுமி தேவிகளையும் அதன் மூலமாக வரும் வளங்களையும் காட்டுகின்றன. 



என்ன பலன் கிடைக்கும்?



கணபதி வழிபாட்டு முறைகளில் இதுவரை வெளியிடப்படாத ரகசியமாகவே இருந்து வந்த சதுராவர்த்தி விதி இன்று எல்லோரும் அறியும்படி வெளியிடப்படுவதற்குக் காரணம் நாட்டில் எல்லோருக்கும் கடன் தொல்லைகள் அதிகமாகி விட்டது. இந்த வழிபாட்டைச் செய்வதால் கடன் தொல்லை தீர்ந்து விடும். 



தொழில் வியாபாரம் அமோகமா நடைபெற, இந்த பூஜையை பல தொழில் அதிபர்கள் சேர்ந்து செய்வதால் பலன் கிடைக்கும். வியாபார எதிரிகள் போட்டியிடுவோர் கோர்ட்டு, வழக்குகளில் சிக்க வைப்போர்களிடமிருந்து விடுதலை, தீர்வு, வெற்றிகள் கிடைக்கும். சர்வ சம்பத்துகளும் உண்டாகும். 



அம்பிகையைக் குறித்து செய்யப்படுகிற சண்டியாகங்கள் பெரும் பொருட்செலவில் பல திருத்தலங்கள், மடங்கள் பீடங்களில் உற்சவ காலங்களில் செய்யப்படுவதை போன்று விநாயக சதுர்த்தி விழாக்கள் தொடங்கும் இக்கால கட்டத்தில் சதுராவர்த்தி தர்ப்பண வழிபாட்டைப் பலன் வேண்டுவோர் செய்து கொள்ளலாம்.





விநாயகருக்கு செய்யவேண்டிய வைவேத்தியங்கள் அவல், பொரி, சோளம், விளாம்பழம், நாவல்பழம், வடை, சுண்டல், மோதகம், வாழப்பழம், ஆப்பிள், கரும்பு. விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் அகவல், விநாயகர் கவசம்,காரிய சித்திமாலை பாடல்களைப் பாடி அவரை வழிபடலாம்.காரிய சித்திமாலை துதியை 3 வேளைகள் அதாவது காலை,மதியம்,மாலை உரைப்பவர்கள் நினைத்த காரியம் கைக்கூடும்.



8 நாட்கள் ஒதிவர மகிழ்ச்சி உண்டாகும்.சங்கடஹர சதுர்த்தியன்று 8 ஒதினால் அஷ்டமாசித்தி கைகூடும்.தினமும் 21 முறை இப்பாடலைப் பாராயணம் செய்வோரின் சந்ததி கல்வியிலும்,செல்வத்திலும் மேம்பட்டுத் திகழும் என்பது ஐதீகம்.விநாயகரின் ஜாதகத்தின் மகிமை.



சனிபகவான் ஒரு முறை விநாயகரைப் பார்த்து உங்களை நாளை வந்து பிடிக்க வேண்டும். நாளைக்கு வருகிறேன். என்றார். சனீஸ்வரனே எனக்கும் கணேசபுரியில் வேலைப்பளு அதிகம், உமக்கும் அதிக வேலை இருக்கும். என்னைப் பிடிக்க வரும் நீங்கள் என் முதுகில், நாளைக்கு வருகிறேன் என்று எழுதி விட்டுப் போங்கள் என்று முதுகைக் காட்டினார் விநாயகர். 



அதில் நாளை மறவாமல் வருகிறேன் என்று எழுதினார். சனீஸ்வரன் போய்விட்டு மறு நாள் வந்த போது முதுகைக் காட்டி என்ன எழுதி உள்ளீர் என்று கேட்க, சனீஸ்வரன் அவரிடம் அடி பணிந்தார். என்னை வணங்குபவர்களைப் பிடித்தால் உமக்கும் இது போல சங்கடம் ஏற்படும் என்றார். 



விநாயகர் கணேசப்பிரபுவே தங்கள் கட்டளைப்படியே செய்கிறேன் என்றார். உங்கள் ஜாதகத்தில் சனியின் பிடிப்புக் காலம் வந்தால் விநாயகர் ஜாதகத்தை ஒரு அட்டையில் எழுதி செவ்வாய் சனிக்கிழமைகளில் வணங்கி வாருங்கள் சனி தசையும், யோக தசை காலமாக அமைந்து விடும். இதுவே விநாயகரின் ஜாதகத்தின் மகிமை.







For all the stars (if u do not name of the god for your star), you can worship Lord Ganesha !!!

you can join here : Lord Ganesha

 MAY LORD GANESHA BLESS ALL OF US ALL THE TIME !!!Jaya Ganesha Jaya Ganesha Jaya Ganesha Paahimaam |Jaya Ganesha Jaya Ganesha Jaya Ganesha Rakshamaam ||

No comments:

Post a Comment

Irumpili Kali Devotees

LinkWithin

Connect with FB

Disclaimer:

The information provided in this website might be wrong or old information. Please add a comment above to get the information corrected

Labels

#RamaNavami #LordRama #Ramar (1) #இராமநாமமகிமை #ராமநாமமகிமை (1) #உங்களுக்குதெரிந்திருக்கலாம் (1) 27 நட்சித்திரகும் அவர் அவர் நட்சித்திர காயத்திரி (1) Bhakti Yoga (2) Blogger (11) IFTTT (12) jnana yoga (2) lord ganesha (3) lord iyyappan (1) lord murugan (4) Mantras (3) Meditation (1) Nar Seva Narayana Seva (1) Navaratri (1) Sri Chakra Nava Avarana Puja (1) WordPress (1) அகஸ்தியர் (1) அகிலாண்டேஸ்வரி (3) அனுமன் (3) ஆஞ்சநேயர் (1) ஆடி அமாவாசை (1) ஆதித்யன் (1) ஆவணி அவிட்டம் (2) ஏழு கன்னிமார்கள் (1) ஐயப்பன் (3) ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களும் அபிஷேகம் செய்ய வேண்டிய பொருள்கள் (1) கடை வீடுகளில் திருஷ்டி (2) கந்த சஷ்டி கவசம் (1) கால பைரவர் (3) காளி (13) கோலமிடுவதால் ஏற்படும் நன்மைகள் (2) சகஸ்ர நாம அர்ச்சனை (1) சக்கரத்தாழ்வார் (1) சங்கடஹர சதுர்த்தி (1) சமஸ்கிருத மொழி (1) சம்ஸ்கிருதம் (2) சரஸ்வதி (3) சரஸ்வதி அஷ்டோத்திர சத நாம ஸ்தோத்திரம் (2) சர்வம் கிருஷ்ணார்ப்பணம் அஸ்து (1) சனி திசை (1) சனி புத்தி (1) சிதம்பரம் நடராஜர் (1) சூரிய பகவான் (2) தண்டாயுதபாணி (2) தானம் - பலன்கள் (1) திருப்பதி ஏழுமலையான் (1) திருமண மந்திரங்கள் (2) தீப ஆராதனைகளின் விளக்கங்கள் (2) தீபாவளியின் வரலாறு & தீபாவளி தானம் (3) துர்க்கா தேவி (11) துளசி (1) துளசியின் சிறப்பும் (1) தை மாதம் (1) நவக்கிரக மந்திரங்கள் (3) நாக தோசம் பரிகாரம் -ராகு -கேது (1) நாகசதுர்த்தி விரதம் (1) பசுவின் கோமியத்தில் (1) பஞ்ச தெய்வங்கள் (2) பிரகதீஸ்வரர் (1) பிரகஸ்பதி (1) பிரதோஷ கால முறை (2) பெருமையும் (1) முத்துக்குமரன் (3) வல்லப மஹா கணபதி (2) வள்ளி மணாளன் (3) விறல் மாரனைந்து திருப்புகழை (1) வீட்டில் பூஜைகளில் உபயோகிக்கக் கூடாத சுவாமி படங்கள் (2) வேலை கிடைக்க மந்திரம் (2) ஸ்ரீ சரபேஸ்வரர் (2) ஸ்ரீ லட்சுமி சங்கு ஸ்லோகம் (1) ஹயக்ரீவர் (1)