Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing

Showing posts with label ஆவணி அவிட்டம். Show all posts
Showing posts with label ஆவணி அவிட்டம். Show all posts

Sunday, 16 November 2014

ஆவணி அவிட்டம் என்பது என்ன?



பழைய பூணூலை கழற்றி விட்டு, புதிய பூணூலைப் போட்டுக் கொள்ள ஒரு தினம். அதுதானே ஆவணி அவிட்டம் என்பது? அதாவது பூணூலை மாற்றுகிற தினம்தானே அது?
சோ- நீங்கள் சொல்கிற மாதிரிதான் இப்போது ஆகிவிட்டது. ஆனால், ஆவணி அவிட்டம் என்பது அதுவல்ல. ஆவணி அவிட்டம் என்று சொல்லப்படுகிற சடங்கின் உண்மையான பெயர் உபாகர்மா. உபாகர்மா என்றால் ஆரம்பம் என்று அர்த்தம். ச்ராவண மாதத்தில் பிரம்மதேவனுக்கு வேதம் கிட்டியது; அதாவது உபதேசம் ஆகியது. அந்த தினம், ஆவணி மாதம், அவிட்ட நக்ஷத்திரம். அதனால்தான் இதற்கு ‘ஆவணி அவிட்டம்’ என்ற பெயரும் வந்தது. அப்போது 
பிரம்மனுக்கு வேதம் கிட்டியதால், அவனுக்கு அது ஆரம்பம் ஆகியது. அந்த ஆரம்பத்தை இங்கே மனிதர்கள் கொண்டாடுகிறார்கள். இது வருடா வருடம் செய்யப்படுகிறபோது, வேதத்திற்குச் செய்யப்படுகிற மரியாதையாக இது கருதப்படுகிறது.

வேதத்திற்கு ஆண்டு விழா என்றும் இதைச் சொல்லலாம். ப்ரம்ம தேவனுக்கு உபதேசமாகிய தினம்; அதிலிருந்து வழி வழியாக மனிதர்களுக்குக் கிடைத்தது. அதனால் ஒவ்வொரு வருடமும் அந்த தினத்தைக் கொண்டாடுகிறோம். அது ஆண்டு விழா.
கேள்வி : ஆரம்பம் என்று சொன்னீர்கள். அது என்றோ ஆரம்பமாகி விட்டது. திரும்பவும் ஒவ்வொரு வருடமும் அதைப் புதிதாக ஆரம்பிப்பானேன்? அது எதற்கு? இது பகுத்தறிவுக்கு ஏற்ற விஷயமாக இல்லையே?
சோ : இது பகுத்தறிவுக்கு ஏற்ற விஷயம் இல்லை என்கிறீர்கள்; சரி, இருக்கட்டும். தேசிய ஒருமைப்பாட்டுக்காக உறுதிமொழி, பிரமாணம் என்று வருடா வருடம் எல்லோரும் எடுத்துக் கொள்கிறார்கள். ‘போன வருடம்தான் இந்த உறுதிமொழி, பிரமாணம் எல்லாம் எடுத்தாகி விட்டதே! அதே தேசம்தான் இருக்கிறது; அதே பிரமாணம்தான் இது. அதை எதற்கு இன்னொரு முறை செய்ய வேண்டும்? தேசம் போய் விட்டதா? அல்லது பிரமாணம்தான் தீர்ந்து விட்டதா? அந்த பிரமாணத்திற்கு ஒரு வருடம்தான் ஆயுளா? ஏன் இதை திரும்பவும் வருடா வருடம் செய்ய வேண்டும்? ஏன்? அந்தப் பிரமாணம் ஆறு 
மாதத்திலேயே தீர்ந்து போகாதா? அல்லது மூன்று மாதத்தில் தீர்ந்து போகாதா? அல்லது தினம் தினம் அந்த பிரமாணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாதா? ஏன்,

இப்படி வருடத்திற்கு ஒருமுறை?’ என்றும் கேட்கலாம். ஆனால், அப்படி யாரும் கேட்பதில்லை. அது எப்படி பகுத்தறிவுக்கு உகந்ததாக இருக்கிறதோ, அதே மாதிரிதான் இதுவும்.
தேசம் என்கிற சிந்தனை, ஒருமைப்பாடு என்கிற சிந்தனை ஆகியவற்றை நமக்கு நாமே நினைவூட்டிக் கொள்கிறோம். அதற்காக இதைச் செய்கிறோம். அதே மாதிரிதான் இந்த உபாகர்மாவும். இந்த சிந்தனை, வேதம் எவ்வளவு உயர்வானது என்பது பற்றியது. ப்ரம்ம தேவனுக்குக் கிடைத்த தினம் பற்றியது. அங்கிருந்து நமக்கு அது கிடைத்தது என்ற விஷயம் பற்றியது. அந்த மாதம், அந்தத் தேதியில், அதாவது ஆவணி மாதம் அவிட்ட நக்ஷத்திரத்தில் நாம் இதையெல்லாம் நினைத்துக் கொள்கிறோம். சொல்லப் போனால், இது தேசிய ஒருமைப்பாட்டு பிரமாணத்தை விட, பகுத்தறிவுக்கு உகந்த விஷயம்.
ஏனென்றால், தேசம் என்பது, என்றோ உண்டாகி விட்டது. ஒருமைப்பாடு என்பதும் என்றோ உண்டாகி விட்டது. ஆனால், தேசம் பிறந்த நேரத்திலோ, ஒருமைப்பாடு உண்டான சமயத்திலோ, இந்த பிரமாணத்தை நாம் எடுத்துக் கொள்வதில்லை. இந்த உபகர்மாவை எடுத்துக் கொண்டால் பிரம்மனுக்கு அது எப்போது உபதேசமாகியதோ, எப்பொழுது பிரம்மனுக்கு வேதம் கிட்டியதோ, அந்த மாதம், அந்த தினம் எது என்று பார்த்து, அந்த தினத்தில் நாம் இங்கே அந்தச் சடங்கைச் செய்கிறோம். அன்று நமக்கு வேதம் பயில்வது மீண்டும் ஆரம்பம்.இது பிராமணர்களுக்கு மட்டும் விதிக்கப்பட்ட விஷயம் என்று நினைத்து விடக்கூடாது. உபநயனம் என்பது முதல் மூன்று வர்ணத்தாருக்கும் உண்டு. அதாவது பிராமண, க்ஷத்ரிய, வைசிய வர்ணங்களைச் சார்ந்தவர் களுக்கு உபநயனம் உண்டு. அவர்கள் மூவருமே வருடா வருடம் இந்த ‘ஆவணி அவிட்டம்’ என்கிற உபாகர்மாவைச் செய்ய வேண்டும். இதை வெறும் பூணூலை மாற்றிக் கொள்கிற விஷயமாகக் கருதி விடாமல், வேதம் நமக்குக் கிட்டியதை கொண்டாடுகிற தினம் என்று நாம் கருத வேண்டும்.
- சோவின் எங்கே பிராமணன் .

Monday, 13 October 2014

ஶ்ரீ கணேஶபுராணே ஶ்ரீ கணேஶ கவசம்


ஏஷோதி சபலோ தைத்யான் பால்யேபி னாஶயத்யஹோ |அக்ரே கிம் கர்ம கர்தேதி ன ஜானே முனிஸத்தம || 1 ||
தைத்யா னானாவிதா துஷ்டாஸ்ஸாது தேவத்ருமஃ கலாஃ |அதோஸ்ய கம்டே கிம்சித்த்யம் ரக்ஷாம் ஸம்பத்துமர்ஹஸி || 2 ||
த்யாயேத் ஸிம்ஹகதம் வினாயகமமும் திக்பாஹு மாத்யே யுகேத்ரேதாயாம் து மயூர வாஹனமமும் ஷட்பாஹுகம் ஸித்திதம் | ஈத்வாபரேது கஜானனம் யுகபுஜம் ரக்தாம்கராகம் விபும் துர்யேது த்விபுஜம் ஸிதாம்கருசிரம் ஸர்வார்ததம் ஸர்வதா || 3 ||
வினாயக ஶ்ஶிகாம்பாது பரமாத்மா பராத்பரஃ |அதிஸும்தர காயஸ்து மஸ்தகம் ஸுமஹோத்கடஃ || 4 ||
லலாடம் கஶ்யபஃ பாது ப்ரூயுகம் து மஹோதரஃ |னயனே பாலசம்த்ரஸ்து கஜாஸ்யஸ்த்யோஷ்ட பல்லவௌ || 5 ||
ஜிஹ்வாம் பாது கஜக்ரீடஶ்சுபுகம் கிரிஜாஸுதஃ |வாசம் வினாயகஃ பாது தம்தான்‌ ரக்ஷது துர்முகஃ || 6 ||
ஶ்ரவணௌ பாஶபாணிஸ்து னாஸிகாம் சிம்திதார்ததஃ |கணேஶஸ்து முகம் பாது கம்டம் பாது கணாதிபஃ || 7 ||
ஸ்கம்தௌ பாது கஜஸ்கம்தஃ ஸ்தனே விக்னவினாஶனஃ |ஹ்றுதயம் கணனாதஸ்து ஹேரம்போ ஜடரம் மஹான் || 8 ||
தராதரஃ பாது பார்ஶ்வௌ ப்றுஷ்டம் விக்னஹரஶ்ஶுபஃ |லிம்கம் குஹ்யம் ஸதா பாது வக்ரதும்டோ மஹாபலஃ || 9 ||
கஜக்ரீடோ ஜானு ஜம்கோ ஊரூ மம்களகீர்திமான் |ஏகதம்தோ மஹாபுத்திஃ பாதௌ குல்பௌ ஸதாவது || 10 ||
க்ஷிப்ர ப்ரஸாதனோ பாஹு பாணீ ஆஶாப்ரபூரகஃ |அம்குளீஶ்ச னகான் பாது பத்மஹஸ்தோ ரினாஶனஃ || 11 ||
ஸர்வாம்கானி மயூரேஶோ விஶ்வவ்யாபீ ஸதாவது |அனுக்தமபி யத் ஸ்தானம் தூமகேதுஃ ஸதாவது || 12 ||
ஆமோதஸ்த்வக்ரதஃ பாது ப்ரமோதஃ ப்றுஷ்டதோவது |ப்ராச்யாம் ரக்ஷது புத்தீஶ ஆக்னேய்யாம் ஸித்திதாயகஃ || 13 ||
தக்ஷிணஸ்யாமுமாபுத்ரோ னைறுத்யாம் து கணேஶ்வரஃ |ப்ரதீச்யாம் விக்னஹர்தா வ்யாத்வாயவ்யாம் கஜகர்ணகஃ || 14 ||
கௌபேர்யாம் னிதிபஃ பாயாதீஶான்யாவிஶனம்தனஃ |திவாவ்யாதேகதம்த ஸ்து ராத்ரௌ ஸம்த்யாஸு யஃவிக்னஹ்றுத் || 15 ||
ராக்ஷஸாஸுர பேதாள க்ரஹ பூத பிஶாசதஃ |பாஶாம்குஶதரஃ பாது ரஜஸ்ஸத்த்வதமஸ்ஸ்ம்றுதீஃ || 16 ||
ஜ்ஞானம் தர்மம் ச லக்ஷ்மீ ச லஜ்ஜாம் கீர்திம் ததா குலம் | ஈவபுர்தனம் ச தான்யம் ச க்றுஹம் தாராஸ்ஸுதான்ஸகீன் || 17 ||
ஸர்வாயுத தரஃ பௌத்ரான் மயூரேஶோ வதாத் ஸதா |கபிலோ ஜானுகம் பாது கஜாஶ்வான் விகடோவது || 18 ||
பூர்ஜபத்ரே லிகித்வேதம் யஃ கம்டே தாரயேத் ஸுதீஃ |ன பயம் ஜாயதே தஸ்ய யக்ஷ ரக்ஷஃ பிஶாசதஃ || 19 ||
த்ரிஸம்த்யம் ஜபதே யஸ்து வஜ்ரஸார தனுர்பவேத் |யாத்ராகாலே படேத்யஸ்து னிர்விக்னேன பலம் லபேத் || 20 ||
யுத்தகாலே படேத்யஸ்து விஜயம் சாப்னுயாத்த்ருவம் |மாரணோச்சாடனாகர்ஷ ஸ்தம்ப மோஹன கர்மணி || 21 ||
ஸப்தவாரம் ஜபேதேதத்தனானாமேகவிம்ஶதிஃ |தத்தத்பலமவாப்னோதி ஸாதகோ னாத்ர ஸம்ஶயஃ || 22 ||
ஏகவிம்ஶதிவாரம் ச படேத்தாவத்தினானி யஃ |காராக்றுஹகதம் ஸத்யோ ராஜ்ஞாவத்யம் ச மோசயோத் || 23 ||
ராஜதர்ஶன வேளாயாம் படேதேதத் த்ரிவாரதஃ |ஸ ராஜானம் வஶம் னீத்வா ப்ரக்றுதீஶ்ச ஸபாம் ஜயேத் || 24 ||
இதம் கணேஶகவசம் கஶ்யபேன ஸவிரிதம் |முத்கலாய ச தே னாத மாம்டவ்யாய மஹர்ஷயே || 25 ||
மஹ்யம் ஸ ப்ராஹ க்றுபயா கவசம் ஸர்வ ஸித்திதம் |ன தேயம் பக்திஹீனாய தேயம் ஶ்ரத்தாவதே ஶுபம் || 26 ||
அனேனாஸ்ய க்றுதா ரக்ஷா ன பாதாஸ்ய பவேத் வ்யாசித் |ராக்ஷஸாஸுர பேதாள தைத்ய தானவ ஸம்பவாஃ || 27 ||
|| இதி ஶ்ரீ கணேஶபுராணே ஶ்ரீ கணேஶ கவசம் ஸம்பூர்ணம் ||

Irumpili Kali Devotees

LinkWithin

Connect with FB

Disclaimer:

The information provided in this website might be wrong or old information. Please add a comment above to get the information corrected

Labels

#RamaNavami #LordRama #Ramar (1) #இராமநாமமகிமை #ராமநாமமகிமை (1) #உங்களுக்குதெரிந்திருக்கலாம் (1) 27 நட்சித்திரகும் அவர் அவர் நட்சித்திர காயத்திரி (1) Bhakti Yoga (2) Blogger (11) IFTTT (12) jnana yoga (2) lord ganesha (3) lord iyyappan (1) lord murugan (4) Mantras (3) Meditation (1) Nar Seva Narayana Seva (1) Navaratri (1) Sri Chakra Nava Avarana Puja (1) WordPress (1) அகஸ்தியர் (1) அகிலாண்டேஸ்வரி (3) அனுமன் (3) ஆஞ்சநேயர் (1) ஆடி அமாவாசை (1) ஆதித்யன் (1) ஆவணி அவிட்டம் (2) ஏழு கன்னிமார்கள் (1) ஐயப்பன் (3) ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களும் அபிஷேகம் செய்ய வேண்டிய பொருள்கள் (1) கடை வீடுகளில் திருஷ்டி (2) கந்த சஷ்டி கவசம் (1) கால பைரவர் (3) காளி (13) கோலமிடுவதால் ஏற்படும் நன்மைகள் (2) சகஸ்ர நாம அர்ச்சனை (1) சக்கரத்தாழ்வார் (1) சங்கடஹர சதுர்த்தி (1) சமஸ்கிருத மொழி (1) சம்ஸ்கிருதம் (2) சரஸ்வதி (3) சரஸ்வதி அஷ்டோத்திர சத நாம ஸ்தோத்திரம் (2) சர்வம் கிருஷ்ணார்ப்பணம் அஸ்து (1) சனி திசை (1) சனி புத்தி (1) சிதம்பரம் நடராஜர் (1) சூரிய பகவான் (2) தண்டாயுதபாணி (2) தானம் - பலன்கள் (1) திருப்பதி ஏழுமலையான் (1) திருமண மந்திரங்கள் (2) தீப ஆராதனைகளின் விளக்கங்கள் (2) தீபாவளியின் வரலாறு & தீபாவளி தானம் (3) துர்க்கா தேவி (11) துளசி (1) துளசியின் சிறப்பும் (1) தை மாதம் (1) நவக்கிரக மந்திரங்கள் (3) நாக தோசம் பரிகாரம் -ராகு -கேது (1) நாகசதுர்த்தி விரதம் (1) பசுவின் கோமியத்தில் (1) பஞ்ச தெய்வங்கள் (2) பிரகதீஸ்வரர் (1) பிரகஸ்பதி (1) பிரதோஷ கால முறை (2) பெருமையும் (1) முத்துக்குமரன் (3) வல்லப மஹா கணபதி (2) வள்ளி மணாளன் (3) விறல் மாரனைந்து திருப்புகழை (1) வீட்டில் பூஜைகளில் உபயோகிக்கக் கூடாத சுவாமி படங்கள் (2) வேலை கிடைக்க மந்திரம் (2) ஸ்ரீ சரபேஸ்வரர் (2) ஸ்ரீ லட்சுமி சங்கு ஸ்லோகம் (1) ஹயக்ரீவர் (1)