Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing

Sunday, 16 November 2014

ஆவணி அவிட்டம் என்பது என்ன?



பழைய பூணூலை கழற்றி விட்டு, புதிய பூணூலைப் போட்டுக் கொள்ள ஒரு தினம். அதுதானே ஆவணி அவிட்டம் என்பது? அதாவது பூணூலை மாற்றுகிற தினம்தானே அது?
சோ- நீங்கள் சொல்கிற மாதிரிதான் இப்போது ஆகிவிட்டது. ஆனால், ஆவணி அவிட்டம் என்பது அதுவல்ல. ஆவணி அவிட்டம் என்று சொல்லப்படுகிற சடங்கின் உண்மையான பெயர் உபாகர்மா. உபாகர்மா என்றால் ஆரம்பம் என்று அர்த்தம். ச்ராவண மாதத்தில் பிரம்மதேவனுக்கு வேதம் கிட்டியது; அதாவது உபதேசம் ஆகியது. அந்த தினம், ஆவணி மாதம், அவிட்ட நக்ஷத்திரம். அதனால்தான் இதற்கு ‘ஆவணி அவிட்டம்’ என்ற பெயரும் வந்தது. அப்போது 
பிரம்மனுக்கு வேதம் கிட்டியதால், அவனுக்கு அது ஆரம்பம் ஆகியது. அந்த ஆரம்பத்தை இங்கே மனிதர்கள் கொண்டாடுகிறார்கள். இது வருடா வருடம் செய்யப்படுகிறபோது, வேதத்திற்குச் செய்யப்படுகிற மரியாதையாக இது கருதப்படுகிறது.

வேதத்திற்கு ஆண்டு விழா என்றும் இதைச் சொல்லலாம். ப்ரம்ம தேவனுக்கு உபதேசமாகிய தினம்; அதிலிருந்து வழி வழியாக மனிதர்களுக்குக் கிடைத்தது. அதனால் ஒவ்வொரு வருடமும் அந்த தினத்தைக் கொண்டாடுகிறோம். அது ஆண்டு விழா.
கேள்வி : ஆரம்பம் என்று சொன்னீர்கள். அது என்றோ ஆரம்பமாகி விட்டது. திரும்பவும் ஒவ்வொரு வருடமும் அதைப் புதிதாக ஆரம்பிப்பானேன்? அது எதற்கு? இது பகுத்தறிவுக்கு ஏற்ற விஷயமாக இல்லையே?
சோ : இது பகுத்தறிவுக்கு ஏற்ற விஷயம் இல்லை என்கிறீர்கள்; சரி, இருக்கட்டும். தேசிய ஒருமைப்பாட்டுக்காக உறுதிமொழி, பிரமாணம் என்று வருடா வருடம் எல்லோரும் எடுத்துக் கொள்கிறார்கள். ‘போன வருடம்தான் இந்த உறுதிமொழி, பிரமாணம் எல்லாம் எடுத்தாகி விட்டதே! அதே தேசம்தான் இருக்கிறது; அதே பிரமாணம்தான் இது. அதை எதற்கு இன்னொரு முறை செய்ய வேண்டும்? தேசம் போய் விட்டதா? அல்லது பிரமாணம்தான் தீர்ந்து விட்டதா? அந்த பிரமாணத்திற்கு ஒரு வருடம்தான் ஆயுளா? ஏன் இதை திரும்பவும் வருடா வருடம் செய்ய வேண்டும்? ஏன்? அந்தப் பிரமாணம் ஆறு 
மாதத்திலேயே தீர்ந்து போகாதா? அல்லது மூன்று மாதத்தில் தீர்ந்து போகாதா? அல்லது தினம் தினம் அந்த பிரமாணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாதா? ஏன்,

இப்படி வருடத்திற்கு ஒருமுறை?’ என்றும் கேட்கலாம். ஆனால், அப்படி யாரும் கேட்பதில்லை. அது எப்படி பகுத்தறிவுக்கு உகந்ததாக இருக்கிறதோ, அதே மாதிரிதான் இதுவும்.
தேசம் என்கிற சிந்தனை, ஒருமைப்பாடு என்கிற சிந்தனை ஆகியவற்றை நமக்கு நாமே நினைவூட்டிக் கொள்கிறோம். அதற்காக இதைச் செய்கிறோம். அதே மாதிரிதான் இந்த உபாகர்மாவும். இந்த சிந்தனை, வேதம் எவ்வளவு உயர்வானது என்பது பற்றியது. ப்ரம்ம தேவனுக்குக் கிடைத்த தினம் பற்றியது. அங்கிருந்து நமக்கு அது கிடைத்தது என்ற விஷயம் பற்றியது. அந்த மாதம், அந்தத் தேதியில், அதாவது ஆவணி மாதம் அவிட்ட நக்ஷத்திரத்தில் நாம் இதையெல்லாம் நினைத்துக் கொள்கிறோம். சொல்லப் போனால், இது தேசிய ஒருமைப்பாட்டு பிரமாணத்தை விட, பகுத்தறிவுக்கு உகந்த விஷயம்.
ஏனென்றால், தேசம் என்பது, என்றோ உண்டாகி விட்டது. ஒருமைப்பாடு என்பதும் என்றோ உண்டாகி விட்டது. ஆனால், தேசம் பிறந்த நேரத்திலோ, ஒருமைப்பாடு உண்டான சமயத்திலோ, இந்த பிரமாணத்தை நாம் எடுத்துக் கொள்வதில்லை. இந்த உபகர்மாவை எடுத்துக் கொண்டால் பிரம்மனுக்கு அது எப்போது உபதேசமாகியதோ, எப்பொழுது பிரம்மனுக்கு வேதம் கிட்டியதோ, அந்த மாதம், அந்த தினம் எது என்று பார்த்து, அந்த தினத்தில் நாம் இங்கே அந்தச் சடங்கைச் செய்கிறோம். அன்று நமக்கு வேதம் பயில்வது மீண்டும் ஆரம்பம்.இது பிராமணர்களுக்கு மட்டும் விதிக்கப்பட்ட விஷயம் என்று நினைத்து விடக்கூடாது. உபநயனம் என்பது முதல் மூன்று வர்ணத்தாருக்கும் உண்டு. அதாவது பிராமண, க்ஷத்ரிய, வைசிய வர்ணங்களைச் சார்ந்தவர் களுக்கு உபநயனம் உண்டு. அவர்கள் மூவருமே வருடா வருடம் இந்த ‘ஆவணி அவிட்டம்’ என்கிற உபாகர்மாவைச் செய்ய வேண்டும். இதை வெறும் பூணூலை மாற்றிக் கொள்கிற விஷயமாகக் கருதி விடாமல், வேதம் நமக்குக் கிட்டியதை கொண்டாடுகிற தினம் என்று நாம் கருத வேண்டும்.
- சோவின் எங்கே பிராமணன் .

வீட்டில் பூஜைகளில் உபயோகிக்கக் கூடாத சுவாமி படங்கள் எவை

கோவணம் கட்டிய மொட்டைத்தலை தண்டாயுதபாணி, 

தலைக்கு மேல் வேல் உயர்ந்து இருக்கும் முருகன் படம்,

தனித்த காளியும், கால கண்டன் படமும் ஆகாது,

சனிஸ்வர பகவானின் படம் இல்லங்களில் வைக்கக்கூடாது,


நவ கிரகங்களின் படமும் இல்லங்களில் பூஜைக்கு உபயோகிக்க கூடாது,


 சக்தியின் உருவத்துடன் இல்லாத நடராஜரின் படமும் ஆகாது, 

ருத்ர தாண்டவமாடுவதும் கொடூர பார்வை உள்ளதும் கோபவேசமாக தவ நிலையிலுள்ளதும், 


தலைவிரி கோலங்களில் உள்ளதுமான அம்பிகை படங்கள் இல்லங்களில் பூஜைக்கு ஆகாது.




பிரகஸ்பதி அருளோடு இந்த நாள் இனிய நாள் ஆகட்டும்

ஓம் பிரஹஸ்பதீச வித்மஹே சுராசார்யாய தீமஹி
தந்நோ குரு ப்ரசோதயாத்
ஓம் வ்ருஷபத்வாஜாய வித்மஹே
க்ருணீ ஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு ப்ரசோதயாத்.


துளசியின் சிறப்பும், பெருமையும்

எத்தனை வகைப்பூக்கள் இருந்தாலும், துளசி செடி இல்லாவிட்டால் அது நந்தவனம் ஆகாது.
* துளசி மட்டுமிருந்தால் கூட அது சிறந்த நந்த வனமாகி விடும்.
* துளசி படர்ந்த இடம் பிருந்தாவனமாகும். துளசியின் இன்னொரு பெயர் பிருந்தா.
* துளசி மாலை அணிந்தோ, துளசி மாலையை கையில் பிடித்தோ பூஜிப்பவர்களுக்கு, 1000 அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.
* மரண காலத்தில் துளசி தீர்த்தம் அருந்துபவர்களை பெருமாள் தன்னுடன் சேர்த்து கொள்கிறார்.
* பவுர்ணமி, அமாவாசை, சஷ்டி, தீட்டு காலங்கள், துவாதசி, மாதப்பிறப்பு, உச்சி வேளை, இரவு வேளை, எண்ணை தேய்த்து கொண்டு துளசி பறிக்க கூடாது.
* அதிகாலைப்பொழுதும், சனிக்கிழமைகளிலும் விரல் நகம் படாமல் விஷ்ணு பெயரை உச்சரித்து கொண்டு துளசி பறிக்க வேண்டும்.
* துளசி பறித்த 3 நாள் வரை உபயோகப்படுத்தலாம்.
* விரதநாள், மூதாதையரின் திதி நாள், தெய்வ பிரதிஷ்டை நாள், இறைவனை வணங்கும் வேளை, தானம் செய்யும் போது ஆகிய இடங்களில் துளசி பயன்படுத்துவதால் அந்த செயல் பரிபூரண பலன் கொடுக்கும்
துளசியை வழிபட வேண்டிய காலங்கள் ........
1.அன்றாடம் பெண்களும், ஆண்களும் வழிபடலாம்.
2.திருமணமாகாத பெண்கள் பவுர்ணமி மற்றும் துவாதசி திதிகளில் ஆராதனை செய்யலாம்.
3.ஏகாதசியன்று விரதமிருந்து வழிபட்டால், நினைத்த காரியங்கள் நிறைவேறும்.
4.திருமணமான பெண்கள் ஸ்ரீதுளசி தேவியை வழிபட்டு வந்தால், நன்மக்கட்பேறு அடைவர்.கர்ப்பம் தரித்த பெண்களின் அச்சம் நீங்கும்.
5.துளசி கவசத்தை மும்முறை காலை நேரத்தில் கூறி வருபவர்களுக்கு அஷ்டலட்சுமி கடாட்சம் கிடைக்கும்.
6.துளசி விரத்தை ஐப்பசி மாத வளர்பிறை துவாதசியில் தொடங்கி கார்த்திகை மாத வளர்பிறை துவாதசியில் முடிக்க வேண்டும்.
7.வேத விற்பன்னர் மூலம் அஷ்டாஷரம்,புருஷ சூக்தம் முதலியவற்றால் வழிபாடு பெற்றால் இஷ்டமான பலன் உடனே கிட்டும்.
8.பெண் மூலிகையாம் துளசியின் அருகில் ஆண் மூலிகையான தொட்டால் சிணுங்கியை வைத்து வழிபட்டு வந்தால் நோய், நொடியின்றி நீண்ட நாள் வாழலாம். முதியோர்கள் நீண்ட ஆயுள் பெறுவர்.
9.வீடுகளில் பூஜை செய்ய முடியாதவர்கள் ஆலயங்களுக்குச் சென்று, திருவிளக்கேற்றி வழிபாடு செய்தால் பலன் முழுவதும் பெறுவர்.
10.ஆலயங்களில் தரும் துளசியை அருந்துபவர் சத்யநாராயண பூஜை செய்த பலன் பெறுவர்.
11.மகா விஷ்ணுவிற்கும்,ஸ்ரீதுளசிக்கும் திருமணம் செய்து வைப்பதன் மூலம் அசுவமேத யாகம் செய்த பலன் அடையலாம்.

ஏழுமலையானை தினமும் முதலில் வழிபடும் பாக்கியசாலி

திருப்பதி கோவிலில் ஒரே ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் ஏழுமலையானை அதிகாலையில் முதல் ஆளாகத் தரிசிப்பதும், இரவில் நடை அடைப்பதற்கு முன் இறுதியாக தரிசிப்பதும் பல நூற்றாண்டுகளாக நடந்து வருகிறது. அவர்களுக்கு மட்டும் ஏன் இந்த சலுகை இதன் பின்னணியில் உள்ள புராணக்குறிப்பு வருமாறு:-
பெருமாளுக்கும் லட்சுமிக்கும் ஒரு முறை பிணக்கு ஏற்பட்டது. திருமகள் கோபித்துக் கொண்டு பூமிக்கு வந்து விட்டார். பின்னாலேயே பெருமாளும் வந்து அவரைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் அவரால் லட்சுமியை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனால் அவர் தவம் செய்தார். நாளடைவில் அவர் மேல் பெரும் புற்று மூடிவிட்டது. அங்கு மாடுகளை மேய்க்கும் கோபாலன் என்பவர் தன்னுடைய பசுவைக்கொண்டு தினசரி அந்த புற்றுக்கு பால் அபிஷேகம் செய்ய, அதில் மனம் மகிழ்ந்த பெருமாள் அவனுடைய சந்ததிகளுக்கு தன்னை தினசரி தரிசனம் செய்யும் வரம் அளித்தார்.
பெருமாளின் இந்த அருளால் கோபாலன் என்பவர் பரம்பரையில் வந்தவர்கள் தினமும் முதலில் ஏழுமலையானை தரிசிக்கிறார்கள். மூலஸ்தான நடை திறந்தவுடன் பெருமாளின் முதல் தரிசனம் இவர்களுக்குத்தான் கிடைக்கிறது.
பின் இவர்கள் அர்ச்சகர்களின் வீடுகளுக்கு சென்று பூஜை செய்வதற்கு வரும்படி அழைக்கின்றனர். அதன் பின்னரே அர்ச்சகர்கள் கோவிலில் தங்கள் கடமையை ஏற்க வருகின்றனர். இரவில் ஏகாந்த சேவை முடிந்த பின் பெருமாளின் அன்றைய இறுதி தரிசனம் கோபாலன் வாரிசுகளுக்கு கிடைத்த பின்தான் நடை அடைக்கப்படுகிறது.

தானம் - பலன்கள்

அன்னதானம் - சர்வதேவ திருப்திகரம் கிடைக்கும். 
அபிஷேகம் - பாவங்கள் அகலும். 
பீடபூஜை - சாம்பராஜ்யம் அளிக்கும். 
கந்தம் - சகல சவுபாக்கியங்களும் தரும்.
புஷ்பம் - சவுக்கியம் கிடைக்கப்பெறும்.
தூபம் - நல்ல வாசனையைத் தரும்.
தீபம் - தேக சாந்தியை கொடுக்கும்.
நைவேத்தியம் - மகா போகத்தை அருளும்.
தாம்பூலம் - லட்சுமி கடாட்சம் கிடைக்கச் செய்யும்.
நமஸ்காரம் - நான்கு புருஷோத்தங்களையும் தரும்.
ஜபம் - அஷ்ட ஐஸ்வர்யமளிக்கும்.
ஹோமம் - சர்வ காமஸ் மிருதியைத் தரும்.


நம்மை பார்க்கும் காக்கும் காவல் தெய்வங்கள் ..................... ஏழு கன்னிமார்கள்

கன்னிமார்கள் சக்தியின் வடிவம். தாங்கள் யாரென உணராத அவர்களிடம் சிவன் திருவிளையாடல் புரிந்ததாக கதைகள் சொல்லுகின்றன.

பார்வதி அம்மன்
பட்டத்தாள்
அருந்தவம்
பூவாள்
பச்சையம்மன்
மறலியம்மன் என்னும் காத்தாயி
பூங்காவனம்.
கன்னிமார்களின் கதை -


பொதிகை மலை அடிவாரத்தில் வாழ்ந்த ஒரு விவசாயிக்கு ஏழு பெண் குழந்தைகள் பிறந்தார்கள். அழகிலும், அறிவிலும் சிறந்திருந்தாலும், ஏழ்மையின் காரணமாய் திருமணம் கைகூடவில்லை. தாங்கள் சக்தியின் வடிவம் என்று உணராதவர்கள், மணலில் சிவலிங்கம் செய்து வழிபட்டு வந்தார்கள்.

சிவனும் அவர்களின் பிராத்தனைக்காக மனம் இரங்கினான். ஆனால் அவர்களிடம் திருவிளையாடல் புரிய ஆசைக் கொண்டு ஒரு விவசாய இளைஞன்போல உருவெடுத்து அங்கு சென்று, பூஜை செய்து கொண்டிருந்த பெண் களைத் தழுவ முயன்றார். “யாரோ ஒருவன் வந்து நம்மை மானபங்கப்படுத்தப் பார்க்கிறானே’ என்று மிரண்டு போன பெண்கள், திசைக் கொருவராகக் காட்டிற்குள் ஓடியொளிந்தனர்.

இப்படிப் பிரிந்துபோன சகோதரிகள் மீண்டும் ஒன்று சேர ஓராண்டு ஆகிவிட்டது. அந்த ஏழு சகோதரிகளில் காத்தாயி என்பவள் மட்டும் இடுப்பில் கைக்குழந்தையை வைத்துக் கொண்டு வந்தாள்.மற்ற சகோதரிகள் குழப்பமடைந்து, “”உனக்கு ஏது இந்தக் குழந்தை?” எனக் கேட்டனர்.

அதற்கு காத்தாயி, “”பூஜை செய்தபோது நம்மைத் துரத்திய அந்த ஆண்மகன் என்னைப் பிடித்து பலவந்தப்படுத்தி விட்டான். அதனால் உண்டானது இந்தக் குழந்தை” என்றாள்.ஆனால் அதை சகோதரிகள் நம்பவில்லை. “என்னை நீங்கள் நம்பவில்லையா? என்மீதே சந்தேகப்படுகிறீர்களே. நான் சொல்வது உண்மை என்று நிரூபிக்க நான் என்ன செய்ய வேண்டும்?” என்று அழுதபடி கேட்டாள்.

“நீயும் உன் குழந்தையும் தீயில் இறங்கி வந்தால் நீ சொல்வதை உண்மை என நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்” என்றனர் மற்ற சகோதரிகள். அதன்படியே தீ மூட்டிய காத்தாயி, அதில் தன் குழந்தையோடு இறங்கி நடந்து வந்தாள்.

அப்போது அவர்களுக் குக் காட்சி கொடுத்த சிவ பெருமான், “”இவையெல் லாம் என் திருவிளையாடல் களில் ஒன்று. நீங்களெல் லாம் எம்மைக் கண்டு பயந்து ஓடி ஒளிந்த அந்த ஏழு ஊர்களிலேயே தெய் வங்களாய் குடிகொண்டு மக்களின் துயரங்களைப் போக்குங்கள். மக்களும் உங்களையே முதன்மைப் படுத்துவார்கள். உங்களுக்கு ஏவலர்களாக- காவலர் களாக பூமாலையப்பர், செம்மலையப்பர், முத்தையா, ராயப்பா, கருப் பையா உள்ளிட்ட ஏழு முனிகளும் உடனிருந்து செயல்படுவார்கள்” என்றருளி மறைந்தார். அவர்களும் அவ்வாறே கோவில் கொண்டார்கள்.

குடி கொண்டிருக்கும் இடங்கள் -
பார்வதி அம்மன் – சன்னாசி நல்லூர்.
பட்டத்தாள் – புலியூர்.
அருந்தவம் – காளிங்கராய நல்லூர்.
பூவாள் – வ. சித்தூர்.
பச்சையம்மன் – குமாரை.
காத்தாயி – வெங்கனூர்.
பூங்காவனம் – அரகண்ட நல்லூர்.


இவர்களில் சன்னாசி நல்லூர் பார்வதி அம்மன் மூத்தவள். மேற்கண்ட ஏழு ஊர்களும் பெரம்பலூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் அமைந்துள்ளன.

Irumpili Kali Devotees

LinkWithin

Connect with FB

Disclaimer:

The information provided in this website might be wrong or old information. Please add a comment above to get the information corrected

Labels

#RamaNavami #LordRama #Ramar (1) #இராமநாமமகிமை #ராமநாமமகிமை (1) #உங்களுக்குதெரிந்திருக்கலாம் (1) 27 நட்சித்திரகும் அவர் அவர் நட்சித்திர காயத்திரி (1) Bhakti Yoga (2) Blogger (11) IFTTT (12) jnana yoga (2) lord ganesha (3) lord iyyappan (1) lord murugan (4) Mantras (3) Meditation (1) Nar Seva Narayana Seva (1) Navaratri (1) Sri Chakra Nava Avarana Puja (1) WordPress (1) அகஸ்தியர் (1) அகிலாண்டேஸ்வரி (3) அனுமன் (3) ஆஞ்சநேயர் (1) ஆடி அமாவாசை (1) ஆதித்யன் (1) ஆவணி அவிட்டம் (2) ஏழு கன்னிமார்கள் (1) ஐயப்பன் (3) ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களும் அபிஷேகம் செய்ய வேண்டிய பொருள்கள் (1) கடை வீடுகளில் திருஷ்டி (2) கந்த சஷ்டி கவசம் (1) கால பைரவர் (3) காளி (13) கோலமிடுவதால் ஏற்படும் நன்மைகள் (2) சகஸ்ர நாம அர்ச்சனை (1) சக்கரத்தாழ்வார் (1) சங்கடஹர சதுர்த்தி (1) சமஸ்கிருத மொழி (1) சம்ஸ்கிருதம் (2) சரஸ்வதி (3) சரஸ்வதி அஷ்டோத்திர சத நாம ஸ்தோத்திரம் (2) சர்வம் கிருஷ்ணார்ப்பணம் அஸ்து (1) சனி திசை (1) சனி புத்தி (1) சிதம்பரம் நடராஜர் (1) சூரிய பகவான் (2) தண்டாயுதபாணி (2) தானம் - பலன்கள் (1) திருப்பதி ஏழுமலையான் (1) திருமண மந்திரங்கள் (2) தீப ஆராதனைகளின் விளக்கங்கள் (2) தீபாவளியின் வரலாறு & தீபாவளி தானம் (3) துர்க்கா தேவி (11) துளசி (1) துளசியின் சிறப்பும் (1) தை மாதம் (1) நவக்கிரக மந்திரங்கள் (3) நாக தோசம் பரிகாரம் -ராகு -கேது (1) நாகசதுர்த்தி விரதம் (1) பசுவின் கோமியத்தில் (1) பஞ்ச தெய்வங்கள் (2) பிரகதீஸ்வரர் (1) பிரகஸ்பதி (1) பிரதோஷ கால முறை (2) பெருமையும் (1) முத்துக்குமரன் (3) வல்லப மஹா கணபதி (2) வள்ளி மணாளன் (3) விறல் மாரனைந்து திருப்புகழை (1) வீட்டில் பூஜைகளில் உபயோகிக்கக் கூடாத சுவாமி படங்கள் (2) வேலை கிடைக்க மந்திரம் (2) ஸ்ரீ சரபேஸ்வரர் (2) ஸ்ரீ லட்சுமி சங்கு ஸ்லோகம் (1) ஹயக்ரீவர் (1)