உ
சிவியநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை.கு.கருப்பசாமி.*
____________________________________
*பிறவாமையை, எப்படி பெறுவது!*
_____________________________________
பிறவாமையைப் பெறுவதற்கு எளிய வழியை, பாடலில் தருகிறார் நம் திருநாவுக்கரசு சுவாமிகள்.
திருநாவுக்கரசு சுவாமிகள் சிவலாயம் ஒன்றிற்கு சென்று தரிசனம் முடித்து திரும்பிக் கொண்டிருந்தார்.
எதிர் புறத்திலிருந்து வந்த ஒரு பெரியவர், அப்பர் பெருமானிடம், அய்யா! முதுமை அடைந்து விட்டேன், எனக்கு விரைவில் பிறப்பற்ற இறப்பு கிடைக்குமா? என்று வினவினார்.
அதற்கு, அப்பர் சுவாமிகள் அப்பெரியவரிடம் கேட்டார், அய்யா ! தாங்கள் இந்நாள் வரை தினமும் இறைவனின் திருநாமமாகிய திருஐந்தெழுத்தை வாயாரா கூறி வந்துள்ளீர்களா?
இல்லை ஐயனே!...
அனுதினமும் இறைவனுடைய பெருமைகளையாவது கேட்டு, அதை ஏனையோருக்கு அடுத்துக் கூறிவோ பாடவோ செய்திருக்கிறீர்களா?
இல்லை ஐயனே!.......
சரி!, தினமும் உணவு உட்கொள்ளுவதற்கு முன்பாகவாவது அருகிலுள்ள சிவலாயம் சென்று வலம் வந்து ஈசனை வணங்கியிருக்கிறீர்களா?
இதுவும் செய்யவில்லை ஐயனே!....
இறைவனுக்கு மலர்களை சேகரித்து ஈசனின் பாதங்களுக்குக் கொண்டு சமர்த்துள்ளீர்களா?
இதுவும் செய்யவில்லை ஐயனே!....
சைவ நெறியும் ஈசனின் அடையாளத்தையும் நினைந்தே இருக்க, அவன் நாமம் *சிவாயநம* என்று கூறி திருநீரு அணிந்து வணங்கிக் கொள்ளும் பழக்கம் உண்டா?
இல்லையே ஐயா!.....
சிவத்தின் அடையாள சின்னமான உத்திராட்சமாவாவது அணிந்திருக்கிறீர்களா?
அதற்கும் அப்பெரியவர்
ஐயா!, இவற்றை எல்லாம் ஒருநாளும் ஒரு பொழுதேனும் செய்ததும் இல்லை, கேட்டதும் இல்லை என்றார்.
உடனே அப்பர் பெருமான் மனம் நொந்து அய்யா, இவ்வளவு காலமும் இதையெல்லாம் செய்யாமல் வீணாக காலத்தை கழித்து விட்டீர்களே!
கிடைத்தற்கரிய வாய்ப்பை இதுவரை வீனாக்கி விட்டீர்களே!, செய்த பாவங்களை குறைக்க எடுத்த மனிதப் பிறவியை வீணே தொலைத்து விட்டு, மேலும் மேலும் பாவ சுமைகளை நிறைத்துவிட்டீர்களே! என்றார்.
இதன் பொருட்டு அப்பர் பெருமான் பாடிய பாடல்
🔔 *திருநாமம் அஞ்செழுத்தும் செப்பா ராகில்*
*தீவண்ணர் திறம் ஒருகால் பேசாராகில்*
*ஒருகாலுந் திருக்கோவில் சூழாராகில்*
*உண்பதன் முன் மலர் பறித்திட்டு உண்ணாராகில்*
*அருநோய்கள் கெட வெண்ணீ றணியாராகில்*
*அளியற்றார் பிறந்த வாறு ஏதோ என்னில்*
*பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்துஞ் செத்தும்*
*பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்றாரே*
நாவுக்கரசர் இதை தமிழ் வேதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.
🙏🏻 *இறைவருடைய திருநாமமாகிய திரு ஐந்தெழுத்தை சொல்லாமலும்,*
*இறைவருடைய பெருமைகளை ஒரு முறையாவது பேசாமலும்,*
*தினமும் ஒருமுறையாவது சிவாலயத்தை வலம் வராமலும்,*
*உண்பதற்கு முன் இறைவருக்கு மலர் பறித்து இடாமலும்,*
*சைவ சின்னமான திருவெண்ணீரு அணியாமலும் வாழ்பவர்கள் நோய்களால் துன்புற்று இறப்பர்,*
*மீண்டும் மீண்டும் பிறப்பர், அப்பிறவியிலும் பயனின்றி மீண்டும் இறப்பர்,*
*இதுவே இவர்களுக்கு தொழிலாகி விடும்.*
மிக முக்கியமான செயலாக திருவைந்தெழுத்தைச் சொல்லுவதே நல்வனவாகும்.
இதனால் நோய்களும் நீங்கும், இனிமேல் பிறக்கவும் நேரிடாது. இதனை சொல்பவர், திருநாமத்தை சொல்லி (சிவாயநம) (நமசிவாய) செபித்து, பிறவாமையை அடைய திருநாவுக்கரசர் சுவாமிகள் இவ்வாறு கூறியிருக்கிறார்.
*திருக்கோபுரம் கட்ட முடிவெடுத்தாள் தாமிரபரணி:*
தாமிரபரணி துடைக்க வில்லையென்றால், இராஜபதியில் திருக்கோபுரம் திருவருளாயிருக்குமா?
அன்று வருணன், மழையை பலமாக வாரி வழங்க, தாமிரபரணி எழும்பி அகன்று பிரவாகமாகி ஓடினாள்.
இதனால், நவகைலாய கேது தல ஆலய இருப்பிடம் தாமிரபரணி வெள்ளத்தால், துடைத்து சுத்தமாகிப் போனது.
அகத்தியரின் முதன்மைச் சீடரான, முக்திக்கு வழிகோலிய உரோமசமுனிவர், புரனமைத்த லிங்கத்திருமேனியானது, தாமரபரணியின் வளைக்கரங்களால் ஸ்பரிக்க, ஆற்றுக்குள் பிரதட்சமானார் கைலாசநாதர்.
கொஞ்ச நாளுக்கு பிறகு வெள்ளம் வடிந்த தாமிரபரணியில், *நான் எங்கும் போகேன்! இங்கே உளேன்!,* என ஆற்றுப்படுகையில் காட்சியருளிக் காட்டினார்.
ஊராரின் உள்ளக் கரங்களால் தீண்டப் பெற்று, அதே இருப்பிடத்தில் இருந்தருளினார் நம் ஈசன்.
*கோயில் எழுந்தது:*
பல மாதங்கள், பல வருடங்களாகக் கீற்றுக் கொட்டகையின் நிழலிலேயேதான் அருளிய வண்ணமிருந்தார் கைலாசநாதர்.
இவ்வழியில் போவோரும் வருவோரும் உண்டு. ஆலயத்துள் சென்று வருவோர் சிலரே....
கோவில்பட்டி திருச்சிற்றம்பலம் சிவனடியார்கள் உள்ளத்துள் திருவுள்ளம் கொண்டார் கைலாசநாதர்.
பிரமாண்டமானது அவராலயம். இரண்டே முக்கால் கோடி ரூபாய் பொருளாதாரத்தில் சீர்பட வழிபாட்டுக்கு வந்தது, அவரருளும் நாடியோர்க்கு கிடைத்து வந்தது.
*திருக்கோபுரம் உயர்ந்தது:*
திருக்கோயில் விரிந்தது சரி!, திருக்கோபுரம் இருந்தால் நல்லாயிருக்குமே!..... எதிர்வரும் சந்ததிகளும், மேன்மைபடுத்துவார்கள் - மேன்மையடைவார்களே! என்றுதான்..........
மீண்டும், கோவில்பட்டி திருச்சிற்றம்பலம் சிவனடியார்கள் கைலாஷ் டிரஸ்டியார்கள் உள்ளம் புகுந்தார் ஈசன்.
ஏழுநிலைத் திருக்கோபுரம் எழுப்ப, மனத் தெளிவு கொடுத்தார் ஈசன்.
சடுதியில் ஆரம்பமானது கோபுரத் திருப்பணி.., உபயதார்களால் உயர்ந்து கொண்டே வந்தது திருநிலைத் தளங்கள்....,
இதில் அடியேனின் குருநாதர் சிவ பாலசுப்பிரமணியன் சிவா அவர்களின் பங்களிப்புகள், அவர்களது முழுசரணாகாதிச் செயல்கள், இவைகளை எண்ணி வியக்குகிறோம்.
அவர்கள் ஆலயத்துக்கு செய்வித்த பாங்குகளை, இங்கே விளம்பரப்படுத்த விரும்பவில்லை.
குரு சொல்லா நிலையை, வரியாய் வரைவது தகா!.
நேற்று வரை, திருக்கோபுரம் ஐந்தாவது நிலைத்தளப் பணிகள் கைலாசநாதர் செளந்தரநாயகி திருவருளாலும், உபயதாரர்களின் உபயத்தாலும் மகிழ்ந்து பூர்த்தியானது. சிவ சிவ திருச்சிற்றம்பலம்.
இனி சிலநாளில், ஆறாவது நிலத்தளப் பணி துவங்கப்பட உள்ளது.
திருக்கோபுரம் உயர்ந்து கொண்டே வருகிறது..... உபயங்களாக வந்த பணம், விரைந்து ஐந்து நிலைத்தளங்களாக விண்ணி நிற்கிறது.
*உபயங்கள்:*
இதுவரை உபயம் தந்த, அடியார்கள், பக்தர்கள், சிவநேச செல்வர்கள், வணிகர்கள், வெளிநாடுவாழ் அன்பு உள்ளங்கள், அடியேனின் 236 வாட்சப் குழுமத்தின் சார்பில், உபயம் தந்த அன்பர்கள், 186 முகநூலில் பதிவை வாசித்து, உபயம் தந்த நேயர்கள், 306 மெசேஞ்ஞர் குழுவுக்குள் இருந்து உபயம் தந்த அன்பு நன்பர்கள், அடியேன் பதியும் பதிவுகளை வாசித்து, அடியேன் இல்லத்திற்கு வங்கி செக் அனுப்பிய ஈசனின் சிவ சொந்தங்கள் அனைவருக்கும் அவர்களின் பாதகமலங்களில் சென்னி மோதி வணங்கிக் கொண்டு, கைலாசநாதர்-செளந்திரநாயகி அம்மை திருவருள் கிடைக்க நினைந்து வணங்கிக் கொண்டோம்.
இன்னும் இரு நிலைத்தளங்களும், சுதை வேலைப்பணிகளும் இருக்கிறது.
இங்ஙனவருளிய ஈசன், இனியும் அங்ஙனமே திருவருள் புரிய அவன் பாத்தையும் அழுத்தி பற்றிக் கொண்டோம். சிவ சிவ, திருச்சிற்றம்பலம்.
ஆறாவது நிலைத்தளப் பணிக்கு, இதுவரை உபயபம் அனுப்பாதோர்கள், உங்களது உபயத்தை அனுப்பி, கைலாசநாதர்
-செளந்தரநாயகி அம்மையின் பேரருளை பெற்றுய்யுங்கள்.
உபயம் அனுப்பியவர்கள், இனி யாரேனும் ஒருவரிடமாவது உபயம் அனுப்ப, தாங்கள் முனைப்பெடுக்குமாறு சிரந்தாழ்ந்து பணிகிறோம்.
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
பணத்தை வங்கி கணக்கில் அனுப்ப வேண்டிய முகவரி.
*கைலாஷ் டிரஸ்ட்*
*Kailash Trust*
*இந்தியன் வங்கி.*
*Indian bank*.
**கோவில்பட்டி கிளை*
*Kovilpatti branch*
*A/Ç no: 934827371*
*IFSC code: IDIBOOOKO51*
*Branch code no: 256*
-----------------------------------------------------------
நன்கொடை உபயம் செய்பவர்கள், செக்/டி.டி யாகவும் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பலாம்.
செக்/டி.டி -
"கைலாஷ் டிரஸ்ட்" என்ற பெயர் இடவும்.
*செக்/டி.டி அனுப்ப வேண்டிய முகவரி:*
கைலாஷ் டிரஸ்ட்.
94/207, தனுஷ்கோடியாபுரம் தெரு.
கோவில்பட்டி.
Pin.628 501
தூத்துக்குடி மாவட்டம்.
Cont..98422 63681
மற்றும்,
*கோவை.கு.கருப்பசாமி.*
69.B, பெரியசாமி லே அவுட், இரண்டாவது வீதி,
இரத்தினபுரி போஸ்ட்,
கோயமுத்தூர். 641 027
தொலைபேசி: 99946 43516
திருச்சிற்றம்பலம்.
*இழுத்த இழுப்புக்கு இலகுவாகாமையின், கொடுத்தா வைத்தேன் அவர்களிடம் கொடேன் என கேட்ப, ஈசசனுக்கானே இறைஞ்சேன் என் மனம்!*
*திருக்கோபுரம் உயர உபயமளியுங்கள்!*
*பிறப்பில்லா பேறு பெற்றுய்யுங்கள்!*
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*