ராகு - கேது தோஷத்திற்கு பரிகாரம் செய்ய புற்றுகளில் பால் ஊற்றுவது,புற்றை வலம் வருதல்,வழிபடுதல் நாகதோச வழிபாடாகும், புற்று மண்ணுக்கு தோல் நோய்களை சரி செய்யக்கூடிய ஆற்றல் உண்டு ...இதனால்தான் பண்ணாரி மாரியம்மன் கோயில்,நாகர்கோயில் நாகநாதன் கோயில்களில் எல்லாம் புற்று மண்ணை பிரசாதமாக கொடுக்கின்றனர்...
நாகதோசத்துக்காக சிலர் பாம்பு இல்லாத புற்றை வழிபடுவதை விட ,பாம்பில்லாத புற்றுகளில் பால் ஊற்றுவதை விட மிருககாட்சி சாலையில் உள்ள ஒரு பாம்பின் பராமரிப்பு செலவினை ஏற்பதும் மிகவும் புண்ணியம் தரக்கூடிய நேரடியான வழிபாடாகும்..நாகதோச பரிகாரமும் ஆகும்.!!
வண்டலூர் உயிரியல் பூங்கவில் இதற்கான வசதி உண்டு...குரு பெயர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் யானை பராமரிப்பு செலவை ஏற்கலாம்..முதியோர் இல்லத்துக்கு உதவலாம் ..சனியால் பாதிக்கப்பட்டவர் கறுப்பு நிற விலங்குகளையும் பறவைகளையும் பராமரிப்பு செலவை கொடுக்கலாம் ...செவ்வாய் தோசத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சிவப்பு நிற விலங்குகள்,பறவைகள்,கொபக்கார விலங்குகள் பராமரிப்பு செலவை ஏற்கலாம்...
இந்த வார ஞாயிற்று கிழமையே அருகில் இருக்கும் மிருக காட்சி சாலைக்கு செல்வீர் நலம் பெறுவீர் விலங்குகள் மற்றும் பறவைகளை வாழ வைப்பீர்!! வாழ்க வளமுடன்!!
No comments:
Post a Comment