நவக்கிரக மந்திரங்கள்
- வியாழன் (குரு)
குரு (வியாழன்) தொடர்பான பிரச்சனைகள் மற்றும்
குரு தசை அல்லது குரு அந்தர் தசையின் போது:
குருவின் கடவுளான சிவபெருமானைத் தினமும் வழிபடவேண்டும்.
தினசரி ஸ்ரீ ருத்ரம் படிக்க வேண்டும்.
குரு மூல மந்திர ஜபம்:"ஓம் ஜ்ரம் ஜ்ரீம் ஜ்ரௌம் ஷக் குரவே நமஹ",
40 நாட்களில் 16000 முறை சொல்ல வேண்டும்.
குரு ஸ்தோத்திரம் படிக்க வேண்டும்.
தேவானாம் ச ரிஷஷீணாம் ச குரும் காஞ்சன ஸந்நிபம்!புத்தி பூதம் த்ரிலோகேசம் தம் நமமாமி ப்ருஹஸ்பதிம்!!
தமிழில்,
குணமிகு வியாழக் குருபகவானே மணமுடன் வாழ மகிழ்வுடனருள்வாய்!பிருகஸ்பதி வியாழப் பரதகுரு நேசா கிரக தோஷமின்றிக் கடாஷித் தருள்வாய்!!
தொண்டு: வியாழனன்று நன்கொடையாக குங்குமப்பூ
அல்லது மஞ்சள் அல்லது சர்க்கரை கொடுக்கவேண்டும்.
நோன்பு நாள்: வியாழன்.
பூஜை: ருத்ர அபிஷேகம்.
ருத்ராட்சம்: 5 முக ருத்ராட்சம் அணியவேண்டும்.
காயத்ரி மந்திரம்
வருஷபத்வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹி|
தந்நோ குரு: ப்ரசோதயாத்||
குரு தசையின்போது வால்மீகி ராமாயணத்தில்
சுந்தர காண்டத்தின், 11 வது அத்தியாயம் தினமும்
படிக்க வேண்டும்.
No comments:
Post a Comment