பிரணவத்தின் சூத்ரதாரியான முருகனே அனைத்திற்கும் ஆதாரமாகி இயக்கமும், ஒடுக்கமுமாகி எல்லா ஜீவர்களிடத்தும் கலந்து நின்று இயற்கையோடு இயற்கையாய் கலந்துவிட்ட படியினாலே தேவரிஷி கணங்களும், சர்வ சக்திகளும் மட்டுமல்ல, இயற்கை கடவுளால் படைக்கப்பட்ட அத்துணை உயிருள்ள ஜீவராசிகளும் ஆசிகளை வழங்கிடும் அவ்வளவு உயர்ந்த ஆற்றலுடைய முருகனின் நாமங்கள். ஏன் ஜடப்பொருள்கள் கூட கட்டுப்படும்.
அற்புதமான சக்திகளை அருளவல்லதும், ஞானத்தை ஊட்ட வல்லதுமானதும், அனைத்தும் தரவல்லதும், ஏன் முருகனைப் போலவே ஆக்கி கொள்ளக் கூடிய வல்லமைகளையும் அந்த முருகனது நாமங்களே நமக்கு அருளுமென்றால் எப்பேர்ப்பட்ட ஆற்றலுடைந்து முருகனின் நாமங்கள்.
எல்லாம் வல்ல முருகனது நாமங்களை சொல்லி ஆசி பெற விரும்பினால், ஜீவதயவே வடிவான முருகனுக்கு பாத்திரமான உலக உயிர்களுக்கு துன்பம் செய்யாது, உயிர்க்கொலைதவிர்த்து, புலால்மறுத்து, சுத்தசைவ உணவை மேற்கொள்ள வேண்டும்.
முருகனது ஜீவதயவு தோன்றுமிடங்களான உலக உயிர்கள் துன்பம் கண்டு இரங்கி இதம் புரிவதோடு மாதம் ஒருவருக்கேனும் பசித்த ஏழைகளுக்குப் பசியாற்றுவிக்க வேண்டும் என்பதுவே முருகனது ஆசியைப் பெற முதன்மை தகுதிகளாகும்.
முத்தர்கள் போற்றும்
முருகப்பிரான் திருவடியை
நித்தமும் போற்றிட
நினைத்தவை சித்தியே.
#ஸ்ரீராமஜயம்